For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!

மும்பை : 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது.

ஒவ்வொரு அணியும் திட்டம் தீட்டி களமிறங்க தயாராகி வருகின்றன. எப்போதும் திட்டமிடுவதில் முன்னணியில் இருக்கும் அணி எது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி தான்.

மும்பை இந்தியன்ஸ் தொடர்

மும்பை இந்தியன்ஸ் தொடர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதலாளி ஆகாஷ் அம்பானி, ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர், பயிற்சியாளர் ஜெயவர்தனே, கேப்டன் ரோஹித் சர்மா என பல முக்கிய நபர்கள் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டங்கள், களத்துக்கு வெளியே உள்ள செயல்பாடுகள் இதையெல்லாம் ஒரு தொடராக வெளியிட்டால் எப்படி இருக்கும்?

பார்க்கவே முடியாத காட்சிகள்

பார்க்கவே முடியாத காட்சிகள்

ஆம், உண்மையில் அப்படி ஒரு ஆச்சரியம் அளிக்கும் ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வரும் மார்ச் 1 முதல் மும்பை இந்தியன்ஸ் அணி 2018இல் என்ன செய்தது? என்ன திட்டம் தீட்டியது? திரைக்கு பின்னே நாம் யாரும் பார்க்கவே முடியாத பல காட்சிகளை, சம்பவங்களை இந்த ஆவணப்படத்தில் பார்க்கலாம்.

பட்டையைக் கிளப்பிய ட்ரைலர்

பட்டையைக் கிளப்பிய ட்ரைலர்

இதற்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது. உண்மையில், ட்ரைலர் பட்டையைக் கிளப்பி உள்ளது. ட்ரைலரில் சச்சின், ரோஹித் சர்மா, ஜெயவர்தனே, ஆகாஷ் அம்பானி, நீடா அம்பானி என பலரும் இடம் பெற்றுள்ளனர்.

சச்சின் ஆலோசனை

சச்சின் ஆலோசனை

பழைய பாணி ஆவணப்படங்கள் போல வெறும் பேட்டியாக இல்லாமல், உண்மையாகவே 2018 ஐபிஎல் தொடரில் திரைக்கு பின்னே நடந்த சம்பவங்களை காட்சிப் படுத்தி உள்ளனர். ட்ரைலரில் தோல்விக்கு பின் சச்சின் பிளே-ஆப் செல்வது பற்றி பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஜெயவர்தனே, ரோஹித் பேச்சு

ஜெயவர்தனே, ரோஹித் பேச்சு

அதே போல, ஜெயவர்தனே ஒரு தோல்விக்கு பின் அணிக் கூட்டத்தில் கடுமையாக பேசும் காட்சி ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ரோஹித் சர்மா முடிவு எடுப்பது பற்றிய தன் எண்ணங்கள் குறித்து அப்போது சூட்டோடு, சூடாக பேசிய காட்சி ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஆகாஷ் அம்பானி கூட்டம்

ஆகாஷ் அம்பானி கூட்டம்

ட்ரைலரின் இறுதியில் ஆகாஷ் அம்பானி ஒரு கூட்டத்தில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. அனேகமாக வியாபரம் மற்றும் அணி மேலாண்மை குறித்த உயர் அதிகாரிகள் கூட்டமாக இது இருக்கலாம்.

சந்தேகம் இருக்கு

சந்தேகம் இருக்கு

இப்படி பல காணக் கிடைக்காத காட்சிகள் இந்த ட்ரைலரில் இடம் பெற்று இந்த ஆவணப்படத்தை காணும் ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது. அதே சமயம், ட்ரைலரில் ஆங்காங்கே "இதெல்லாம் ஸ்கிரிப்ட் எழுதி படம் பிடிச்சிருப்பாங்களோ?" என நமக்கு சந்தேகம் எழாமல் இல்லை.

வெப் சீரிஸ் எப்படி இருக்கும்?

வெப் சீரிஸ் எப்படி இருக்கும்?

மார்ச் 1 அன்று வெளிவரும் இந்த வெப் சீரிஸ் எப்படி இருக்கிறது என பார்க்கலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் கூட செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 20, 2019, 19:15 [IST]
Other articles published on Feb 20, 2019
English summary
Cricket Fever - Mumbai Indians Trailer is stunning and releasing on March 1
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X