For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி… நீங்க எல்லாரும் இனி ஒலிம்பிக்கில் விளையாட போறீங்க…!! எப்படி..? இப்படி தான்..!!

துபாய்: 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார்.

உலக கிரிக்கெட் அமைப்புகளில் மிகவும் பெரிய அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியமான பிசிசிஐயாகும். அண்மையில் தேசிய ஊக்க மருந்து தடை(WADA) அமைப்பின் விதிமுறைகளுக்குள் வந்தது. இது கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற முக்கிய ஒன்றாக அமைந்துள்ளது.

Cricket may include in olympic games soon

ஒரு விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்றால் அந்த விளையாட்டு தொடர்பாக உள்ள அமைப்புகள் அனைத்தும் உலக ஊக்க மருந்து தடை அமைப்பின் விதிகளுக்குள் வரவேண்டும். இந்நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பது தொடர்பாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டி தலைவர் மைக் கேட்டிங் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாங்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கும்படி ஐசிசியுடன் கேட்டு கொண்டிருக்கிறோம். இதற்கு ஐசிசியின் புதிய செயல் அதிகாரி மனு சாஹனி, முன்னேற்றம் உள்ளது என்று தெரிவித்தார்.

கன்பார்ம்..! இந்த முறை ஆஷஸ் கோப்பை அந்த அணிக்கு தான்..! முன்னாள் கேப்டன் ஓபன் டாக் கன்பார்ம்..! இந்த முறை ஆஷஸ் கோப்பை அந்த அணிக்கு தான்..! முன்னாள் கேப்டன் ஓபன் டாக்

மேலும் வரும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அடுத்த 18 மாதங்களில் அதை செய்வது எப்படி என்பது முடிவு செய்யப்படும் சூழல் உருவாகும் என்று நினைக்கிறேன்.

பிசிசிஐ ஒலிம்பிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் இருவரும் விளையாட வேண்டும். அனைத்து நாடுகளும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மகளிர் கிரிக்கெட் போட்டி 2022ம் ஆண்டு காமன்வெல்த்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டது என்றார்.

Story first published: Tuesday, August 13, 2019, 12:32 [IST]
Other articles published on Aug 13, 2019
English summary
Cricket may include in olympic games soon.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X