For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வலியை சொல்ல வார்த்தைகள் போதாது.. தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்

டெல்லி : காஷ்மீரின் புல்வாமா சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்திய வீரர்கள் ஐபிஎல்-க்காக இதை தியாகம் பண்றாங்க! தப்புக் கணக்கு போடும் முன்னாள் வீரர்! இந்திய வீரர்கள் ஐபிஎல்-க்காக இதை தியாகம் பண்றாங்க! தப்புக் கணக்கு போடும் முன்னாள் வீரர்!

சேவாக் கண்டனம்

நம் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான இந்த கோழைத்தனமான தாக்குதல் உண்மையில் வலிக்கிறது. இந்த வலியை சொல்ல வார்த்தைகள் போதாது. காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டுகிறேன் சேவாக் பதிவிட்டுள்ளார்.

விவிஎஸ் லக்ஷ்மன் வருத்தம்

நம் வீரம் நிறைந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீதான மோசமான தாக்குதல் பற்றி கேட்க வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன் என தன் வருத்தத்தை பதிவு செய்தார் லக்ஷ்மன்.

தவான் ஆழ்ந்த வருத்தம்

இந்த செய்தியால் ஆழ்ந்த வருத்தத்திலும், அமைதியின்றியும் இருக்கிறேன். புல்வாமா தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தவான் கூறி உள்ளார்.

கௌதம் கம்பீர் கோபம்

கௌதம் கம்பீர் மிகவும் கோபமாக பதிவிட்டுள்ளார். "பிரிவினைவாதிகளிடம் பேசுவோம், பாகிஸ்தானிடம் பேசுவோம். ஆனால், இந்த முறை மேஜையில் அல்ல, போர்க்களத்தில். பொறுத்தது போதும்" என குறிப்பிட்டுள்ளார்.

கோலி ஷாக்

புல்வாமா தாக்குதல் குறித்து கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த வீரர்களுக்கு இதயம் கனிந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார் கோலி

Story first published: Friday, February 15, 2019, 15:55 [IST]
Other articles published on Feb 15, 2019
English summary
Cricket players register their condemn and condolences to the Pulwama attack
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X