For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 ஓவர் ஓவர்.. அடுத்து வருகிறது ஆளுக்கு 10 ஓவர்!

By Staff

அபுதாபி: கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டி, 50 ஓவர் கொண்ட ஒருதினப் போட்டியாக மாறியது. பின்னர் அது 20 ஓவர்கள் கொண்டதாக சுருங்கியது. உலகம் மிகவும் வேகமாக போய் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், தற்போது டி-10 போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபரான ஷாஜி உல் முல்க் முயற்சிக்கு, எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது.

இந்த முயற்சிக்கு இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்களுடன், ஐசிசியும் ஓகே சொல்லிவிட்டது. அதனால், கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், டி-10 போட்டியில் பங்கேற்கலாம்.

நம்மூர் ஐபிஎல் போல

நம்மூர் ஐபிஎல் போல

நம்மூர் ஐபிஎல் போல, யுஏஇயில் டி-10 போட்டி நடக்க உள்ளது. ஷார்ஜாவில் வரும் டிசம்பர் 21 முதல் 24 வரை நடக்கும் போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன.

6 அணிகள்

6 அணிகள்

பஞ்சாபி லெஜன்ட்ஸ், பாக்டூன்ஸ், மராதா அராபியன்ஸ், பங்களா டைகர்ஸ், கொலம்போ லயன்ஸ், கேரளா கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இதற்கான அணித் தேர்வு, இந்த மாதம் நடக்க உள்ளது.

தலா 10 ஓவர் போட்டி

தலா 10 ஓவர் போட்டி

ஒவ்வொரு அணியும் தலா 10 ஓவர்களை விளையாடும். மொத்தம், 90 நிமிடங்களுக்குள் போட்டி முடிந்து விடும். இங்கிலாந்து கேப்டன் மார்கன், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இந்தத் தொடரின் முன்னோடிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் வீரேந்திர ஷேவாக்

இந்தியாவின் வீரேந்திர ஷேவாக்

இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா, பாகிஸ்தான் ஷாகித் அப்ரிதி, இந்தியாவின் வீரேந்திர சேவாக் ஆகியோர் தூதர்களாக செயல்பட உள்ளனர்.

Story first published: Wednesday, October 4, 2017, 12:36 [IST]
Other articles published on Oct 4, 2017
English summary
UAE gave birth to T-10 matches to be played in December
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X