For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச போட்டியில் மீண்டும் டிவில்லியர்ஸ்?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. குழப்பம் தீர்ந்தது!

டி20 உலகக்கோப்பையின் போது தென்னாப்பிரிக்க அணியில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் மீண்டும் இணைகிறாரா என்ற கேள்விகளுக்கு அதிகாரப்பூர்வ பதில் கிடைத்துள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

'மூளையில் பிரச்னை இருக்கலாம்’ கோலி குறித்த பேச்சால் வந்த பிரச்னை.. முன்னாள் வீரர்களுக்கு தீராத சண்டை'மூளையில் பிரச்னை இருக்கலாம்’ கோலி குறித்த பேச்சால் வந்த பிரச்னை.. முன்னாள் வீரர்களுக்கு தீராத சண்டை

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் மிகவும் பலம் வாய்ந்த அணியான தென்னாப்பிரிக்கா, மீண்டும் தனது அதிரடி மன்னன் டிவில்லியர்ஸை களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

ஏபி டிவில்லியர்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட வீரர்களில் ஏ.பி.டிவில்லியர்ஸ் முக்கியமானவர். ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிரடி காட்டி தனக்கான தனி முத்திரை பதித்தவர். குறிப்பாக இவரின் ஆட்டத்திற்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரின் ஃபார்முக்கு இன்னும் 4 - 5 ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு திடீரென ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்த டிவில்லியர்ஸ், கடந்த 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மீண்டும் தென்னாப்பிர்க்க அணிக்காக விளையாட தயாராக உள்ளேன் என விருப்பம் தெரிவித்தார். ஆனால் அப்போது அவரை அணியில் சேர்த்துக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

அணியில் சேர விருப்பம்

அணியில் சேர விருப்பம்

இந்த சூழலில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் டிவில்லியர்ஸ் நாட்டிற்காக மீண்டும் ஆட வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இதனை அந்த அணியின் பயிற்சியாளர் பவுச்சரும் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த டிவில்லியர்ஸ், தான் தயாராக இருப்பதாகவும், தென்ஆப்பிரிக்க அணியில் தான் விளையாட இடம் இருந்தால், அதனால் யாரும் பாதிப்படையாமல் இருந்தால், அதே வேளையில் தனக்கு உடற்தகுதி இருந்தால் நிச்சயம் ஆடுவேன் எனக்கூறியிருந்தார்.

ஐபிஎல்

ஐபிஎல்

இதற்கேற்றார் போல சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் தனது பழைய விஸ்வரூபத்தை டிவில்லியர்ஸ் காட்டியிருந்தார். 7 போட்டிகளில் ஆடிய அவர் 207 ரன்களை விளாசினார். இதனால் ஏ.பி.டிவில்லியர்ஸின் அதிரடியை நிச்சயம் டி20 உலகக்கோப்பையிலும் காணலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்துள்ளனர்.

Story first published: Tuesday, May 18, 2021, 18:30 [IST]
Other articles published on May 18, 2021
English summary
Cricket South Africa announce AB de Villiers will not be coming out of international retirement!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X