For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடும் நெருக்கடி.. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் உயர் பதவியில் அமர்ந்த முன்னாள் கேப்டன்!

ஜோகன்ஸ்பெர்க் : கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநராக கிரீம் ஸ்மித்தை நியமனம் செய்து அதன் தலைவர் கிறிஸ் நென்சானி அறிவித்துள்ளார்.

பிரச்சனை காலங்களில் சரியான அணுகுமுறை இல்லை என குற்றம் சாட்டி கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் தலைவர் கிறிஸ் நென்சானி மற்றும் அதன் உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய கடுமையான நெருக்கடிகளுக்கிடையில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநரை தேர்வு செய்துள்ளார் அதன் தலைவர் கிறிஸ் நென்சானி.

 கிறிஸ் நென்சானிக்கு நெருக்கடி

கிறிஸ் நென்சானிக்கு நெருக்கடி

கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா போர்டின் தலைவராக உள்ள கிறிஸ் நென்சானி கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் போர்டின் இயக்குநராக கிரீம் ஸ்மித்தை நியமித்து அறிவித்துள்ளார்.

 தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தல்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தல்

கடுமையான நேரங்களில், பொறுப்புகளை ஏற்பதிலிருந்து சிஎஸ்ஏ பின்வாங்குவதாக குற்றம் சாட்டியுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், அதன் தலைவர் கிறிஸ் நென்சானி மற்றும் உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது.

 கடும் நெருக்கடியில் சிஎஸ்ஏ

கடும் நெருக்கடியில் சிஎஸ்ஏ

தவறான நடத்தை உள்ளிட்ட காரணங்களால் சிஎஸ்ஏவின் தலைமை நிர்வாகி தபங் முர்ரே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அது கடந்த ஒருவார காலரமாக கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.

 கூட்டத்தில் இயக்குநர் தேர்வு

கூட்டத்தில் இயக்குநர் தேர்வு

இந்நிலையில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க பட்டதாகவும், முக்கியமாக அதன் இயக்குநராக கிரீம் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் கிறிஸ் நென்சானி தெரிவித்துள்ளார்.

 பொறுப்பை ஏற்பார் என நம்பிக்கை

பொறுப்பை ஏற்பார் என நம்பிக்கை

சிஎஸ்ஏவின் இயக்குநராக கிரீம் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அதன் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் கிறிஸ் நென்சானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தான் ஸ்மித்திடம் பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 டிசம்பர் 26ல் துவக்கம்

டிசம்பர் 26ல் துவக்கம்

இதனிடையே வரும் 26ம் தேதி துவங்கவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா பங்குபெறவுள்ளதால், ஸ்மித் உடனடியாக இயக்குநராக தன்னுடைய பொறுப்பை ஏற்று அதற்கான பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 கிறிஸ் நென்சானி அறிவிப்பு

கிறிஸ் நென்சானி அறிவிப்பு

சிஎஸ்ஏவின் ஆலோசனை கூட்டத்தில் தங்களது ராஜினாமா குறித்து எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் நென்சானி கூறியுள்ளார்.

Story first published: Sunday, December 8, 2019, 15:35 [IST]
Other articles published on Dec 8, 2019
English summary
Cricket south Africa President announced Graeme smith as president
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X