For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் தொடர்களும்.. தீவிரவாத தாக்குதலும்.. இன்று நியூசிலாந்து.. அன்று?

மும்பை : நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பி உள்ளனர்.

தாக்குதலுக்கு மறுநாள் அதே நகரில் நியூசிலாந்து - வங்கதேச அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதுவதாக இருந்தது. அதற்காக இரு நாட்டு வீரர்களும் அதே நகரில் தான் தங்கி இருந்தனர்.

கிரிக்கெட் ரசிகர்களே மறந்துவிடாதீங்க... சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் கிரிக்கெட் ரசிகர்களே மறந்துவிடாதீங்க... சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

வங்கதேச வீரர்கள்

வங்கதேச வீரர்கள்

மேலும், வங்கதேச வீரர்கள் தாக்குதல் நடந்த போது, மசூதிக்கு அருகே இருந்ததாகவும், சில நிமிட இடைவெளிகளில் தான் அவர்கள் தப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் ரத்து

தொடர் ரத்து

மேலும், நியூசிலாந்து - வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போல, தீவிரவாத தாக்குதல்களால் கிரிக்கெட் போட்டிகள், தொடர்கள் ரத்தாவது புதிதல்ல. அப்படி இரு முக்கிய சம்பவங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

லாகூர் தாக்குதல்

லாகூர் தாக்குதல்

2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில், இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. மார்ச் 3 அன்று பாதுகாப்பு வீரர்கள் புடை சூழ இலங்கை அணி லாகூர் மைதானத்துக்கு சென்று கொண்டு இருந்த போது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

குறி வைத்து தாக்குதல்

குறி வைத்து தாக்குதல்

குறிப்பாக இலங்கை வீரர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது. நல்ல வேளையாக இலங்கை வீரர்கள் யாரும் இந்த தாக்குதலில் பலியாகவில்லை. எனினும், சிலர் காயமடைந்தனர்.

வர மாட்டோம்

வர மாட்டோம்

இந்த தாக்குதல் சம்பவம் கிரிக்கெட் உலகையே ஆட்டிப் படைத்தது. அதன் பின் எந்த நாடும் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் செல்ல மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது, எனினும், ஜிம்பாப்வே அணி மட்டும் ஒரு முறை பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.

பாகிஸ்தான் அணிக்கு சோதனை

பாகிஸ்தான் அணிக்கு சோதனை

பாகிஸ்தான் அணி தன் சொந்த நாடு போல அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஐக்கிய அரபு நாட்டில் தான் ஆடி வருகிறது. தன் சொந்த உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் சில போட்டிகளை தவிர அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு நாட்டில் தான் நடத்தி வருகிறது.

மும்பை தாக்குதல்

மும்பை தாக்குதல்

மற்றொரு சம்பவம், 2008இல், மும்பையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம். இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி முடித்து, இந்தியா 5-0 என தொடரைக் கைப்பற்றிய அன்று இரவு, மும்பை தாக்குதல் குறித்த செய்தி வந்து சேர்ந்தது.

இங்கிலாந்து மீண்டும் வந்தது

இங்கிலாந்து மீண்டும் வந்தது

செய்தி வந்த உடன் இங்கிலாந்து அணி தங்கள் நாட்டுக்கு கிளம்பிச் சென்றது. இதனால், அடுத்து நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை. பின்னர், இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மீண்டும் இந்தியா வந்தது.

Story first published: Friday, March 15, 2019, 18:21 [IST]
Other articles published on Mar 15, 2019
English summary
Cricket tours that got cancelled due to terrorist attack
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X