இந்தியா போட்டிக்கு முன் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.. திடீர் பரபரப்பு!

உலக கோப்பை தொடரில் இருந்து ரஸ்ஸல் திடீரென நீக்கம்

லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் முட்டிக் காலில் காயமடைந்து இருந்தார். அதோடு உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றார். பின் அவருக்கு சில போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டது.

இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட உள்ள நிலையில் ஆண்ட்ரே ரஸ்ஸலை நீக்கி உள்ளது அந்த அணி. அவருக்கு மாற்று வீரராக சுனில் ஆம்ப்ரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

என்ன ஆச்சு?

என்ன ஆச்சு?

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல், உலகக்கோப்பை தொடரின் துவக்கத்தில் தன் முட்டிக் காலில் காயமடைந்தார். அதோடு சமாளித்து விளையாடி வந்தார். அந்த காயம் குணமாகாத நிலையில், யல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ரஸ்ஸல்.

ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் ஆட்டம்

அவர் அணியில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் ஐபிஎல். அந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய ஆண்ட்ரே ரஸ்ஸல் நம்ப முடியாத வகையில் ஆடி சில போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

அணியில் இடம்

அணியில் இடம்

அதன் தாக்கத்தால், நீண்ட காலத்திற்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணியில் சேர்க்கப்பட்டு நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கு சென்றார். அங்கே பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டினார். எனினும், அடுத்து அவர் ஆடிய போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே சுமாராக இருந்தது.

திடீர் நீக்கம்

திடீர் நீக்கம்

கூடவே அவருக்கு காயமும் சேர்ந்து கொள்ள, நான்கு போட்டிகளில் விளையாடியதோடு ஓய்வில் இருந்தார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் பங்கேற்பார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், திடீரென அவரை நீக்கிய செய்து வெளியாகி இருக்கிறது.

ஏன் பரபரப்பு?

ஏன் பரபரப்பு?

இது உலகக்கோப்பை தொடரில் பரபரப்பையும் கூட்டியுள்ளது. இன்று காலை வரை ஆண்ட்ரே ரஸ்ஸல் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவார் என்பதே செய்தியாக இருந்தது. இந்திய வீரர் சாஹல் கூட ரஸ்ஸலை சமாளிப்பது பற்றி பேட்டி கொடுத்தார். இந்த நிலையில், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட செய்தி வந்துள்ளது. இதில் இந்திய அணிக்கு எதிரான திட்டம் ஏதும் இருக்குமா? என்ற ரீதியிலும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

புதிய வீரர் எப்படி?

புதிய வீரர் எப்படி?

ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு மாற்றாக சுனில் ஆம்ப்ரிஸ் அணியில் இணைந்துள்ளார். இவர் இது வரை ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடி சராசரியாக 105 வைத்துள்ளார். கடந்த மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக 126 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். இந்திய அணிக்கு எதிராக இவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Cricket World cup 2019 : Andre Russell ruled out of World cup just before India clash
Story first published: Monday, June 24, 2019, 21:02 [IST]
Other articles published on Jun 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X