For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா என்ன மாதிரி ஆடுவாங்கன்னு நல்லா தெரியும்.. நாங்கதான் ஜெயிப்போம்.. சவால் விடும் கிறிஸ் கெயில்!

மான்செஸ்டர் : இந்திய அணிக்கு எதிரான முக்கிய உலகக்கோப்பை லீக் போட்டிக்கு முன்னதாக கிறிஸ் கெயில் இந்தியாவை வீழ்த்துவோம் என சவால் விட்டுள்ளார்.

அதிலும், இந்திய அணி எப்படி ஆடும் என்பது தெரியும். அதை தோற்கடிக்க ஐபிஎல்-ஐ பயன்படுத்துவோம் என்றும் கூறி இருக்கிறார் கெயில்.

இந்தியா - வெ.இண்டீஸ்

இந்தியா - வெ.இண்டீஸ்

உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி செல்லும் சிறிய வாய்ப்பையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

கெயில் என்ன சொன்னார்?

கெயில் என்ன சொன்னார்?

இந்தப் போட்டி குறித்து பேசுகையில், இது எங்களுக்கு முக்கியமான போட்டி. நாங்கள் அரையிறுதி செல்ல சிறிய வாய்ப்பு உள்ளது. இந்தியா நல்ல கிரிக்கெட் ஆடி வருகிறது. எல்லோருக்கும் இந்தியாவின் கிரிக்கெட் எப்படி இருக்கும் என தெரியும். நாளை அதை நாங்கள் அடக்கி, அதை விட சிறப்பாக செயல்படுவோம் என்றார் கிறிஸ் கெயில்.

ஐபிஎல் அனுபவம்

ஐபிஎல் அனுபவம்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடந்த சில வருடங்களாக இந்தியாவின் ஐபிஎல்-இல் ஒரு அங்கம் என்பதால் இந்திய கிரிக்கெட்டில் எந்த மாதிரியான கிரிக்கெட் இருக்கும் என்பது எனக்கு தெரியும். நாளை எல்லாம் சரியாக இருக்கும், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றார் கெயில்.

திணறல்

திணறல்

வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு முன் இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டியில் தடுமாறி இருக்கிறது. பேட்டிங் பலவீனங்கள் வெளியே அப்பட்டமாக தெரிந்தது. பந்துவீச்சு மட்டுமே இந்திய அணிக்கு வலுவாக இருக்கும் ஒரே விஷயம்.

போராட்டம்

போராட்டம்

மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணி வெற்றி பெற்று அரையிறுதி செல்லாவிட்டாலும்ம இந்திய அணியை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Wednesday, June 26, 2019, 23:28 [IST]
Other articles published on Jun 26, 2019
English summary
Cricket World cup 2019 : Chris Gayle says IPL knowledge will help winning against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X