For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடா.. கோலியை முந்த முடியலையே.. ஒரு இன்னிங்க்ஸ்-ல போச்சே.. பெரிய சாதனையை தவறவிட்ட ஆம்லா!

பிர்மிங்காம் : தென்னாப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா ஒருநாள் போட்டிகளில் முக்கிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் ஹஷிம் ஆம்லா அரைசதம் அடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் 24 ரன்களை கடந்த போது ஆம்லா முக்கியமான ஒருநாள் போட்டி மைல்கல்லை எட்டி சாதனை புரிந்தார்.

என்ன சாதனை?

என்ன சாதனை?

ஒருநாள் போட்டிகளில் 8,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார் ஹஷிம் ஆம்லா. முன்னதாக, 7,976 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். 8,000 ரன்கள் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்தார்.

கோலி முதல் இடம்

கோலி முதல் இடம்

விரைவாக 8,000 ரன்களை எட்டிய வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. விராட் கோலி 175 இன்னிங்க்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார். ஆம்லா 176 இன்னிங்க்ஸ்களில் எட்டினார். வெறும் ஒரு இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் முதல் இடத்தை தவறவிட்டார் ஆம்லா.

ஆறு முறை

ஆறு முறை

இதற்கு முன் 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000 ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை செய்தார் ஆம்லா. ஆனால், 8,000 ரன்களை மட்டும் ஒரு இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் விராட் கோலியிடம் தவறவிட்டார்.

எப்படி தவறவிட்டார்?

எப்படி தவறவிட்டார்?

ஹஷிம் ஆம்லா உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இருந்தே பார்ம் அவுட்டில் இருக்கிறார். உலகக்கோப்பை தொடரிலும் ரன் குவிக்க தடுமாறி வரும் அவர், ஒவ்வொரு போட்டியிலும் அதிக பந்துகளை எடுத்துக் கொள்கிறார்.

பந்துகளை வீணடித்தார்

பந்துகளை வீணடித்தார்

நியூசிலாந்து போட்டிக்கு முந்தைய ஆப்கானிஸ்தான் போட்டியில் வெற்றி இலக்கான 127 ரன்களை துரத்தி ஆடிய போது தேவையே இல்லாமல் பந்துகளை வீணடித்து, 83 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார் ஆம்லா. அந்தப் போட்டியில் அவர் துரிதமாக ஆடி இருந்தால், கூடுதலாக 24 ரன்கள் சேர்த்து, விராட் கோலியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருப்பார்.

ஆமை வேகம்

ஆமை வேகம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஆம்லா 83 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டி போலத் தான் ஆடினார். தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்துக்கு எதிராக 49 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தது.

Story first published: Wednesday, June 19, 2019, 21:10 [IST]
Other articles published on Jun 19, 2019
English summary
Cricket World cup 2019 : Hashim Amla second fastest to 8000 ODI runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X