For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போச்சு.. சொதப்பப் போகும் இந்திய அணி.. காத்திருக்கும் கண்டம்.. திட்டம் போட்டு ஆடினால் தப்பிக்கலாம்!

Recommended Video

Icc world cup 2019: இனிமேல் தான் இந்தியாவுக்கு பெரிய சவால் இருக்கு- வீடியோ

மான்செஸ்டர் : இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இதுவரை வெற்றிகரமாக வலம் வருகிறது.

ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அதைத் தவிர வேறு எந்த விமர்சனமும் இந்திய அணி மீது இல்லை. ஆனால், இந்திய அணிக்கு இனிமேல் தான் கண்டம் ஆரம்பம். இனி வரும் உலகக்கோப்பை லீக் போட்டிகள் இந்திய அணியின் காலை வாரி விடலாம்.

அடுத்த போட்டிகள்

அடுத்த போட்டிகள்

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்து லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதுவரை இந்தியா எளிதாக வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளை விட இனி வரும் அணிகளுக்கு எதிராக ஆடுவது கடினம்.

சிறிய அணிகள்

சிறிய அணிகள்

இங்கிலாந்து போட்டி கடினம் என்றால் பரவாயில்லை. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் போட்டிகள் எப்படி கடினம் ஆகும்? இந்த மூன்று அணிகளும் உலகக்கோப்பை தொடரில் சில அதிர்ச்சிகளை ஏற்படுத்தி இருந்தாலும், அதிக பலவீனம் கொண்ட அணிகள் தான்.

ஏன் கடினம்?

ஏன் கடினம்?

இந்திய அணியின் அனுபவத்துக்கு இந்த மூன்று அணிகளாலும் ஈடு கொடுத்து ஆட முடியாது. ஆனால், இந்திய அணிக்கு கடந்த ஆண்டில் இருந்தே சிறிய அணிகள் என்றாலே தடுமாற்றம் என்பது தான் பிரச்சனை. அது ஆப்கானிஸ்தான் போட்டியில் பட்டவர்த்தனமாக தெரிந்தது.

ஆசிய கோப்பை பாடம்

ஆசிய கோப்பை பாடம்

கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு இணையான அணியாக கூறப்பட்ட பாகிஸ்தான் அணியை இரு முறை எளிதாக வீழ்த்தி அசத்தியது. ஆனால், கத்துக்குட்டி அணியான ஹாங்காங் அங்கு எதிராக வெற்றி பெற போராடியது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி டை ஆனது. இறுதிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக கடைசி பந்து வரை போராடி வெற்றி பெற்றது இந்தியா.

வெ.இண்டீஸ் அதிர்ச்சி

வெ.இண்டீஸ் அதிர்ச்சி

ஆசிய கோப்பையை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், இந்திய அணி தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அப்போது அனுபவ வீரர்கள் பலரும் இல்லை. பல வீரர்கள் அந்த தொடரில் தான் அறிமுகம் ஆனார்கள். அந்த சூழ்நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டியை டையில் முடித்தது.

ஆப்கனிடம் போராட்டம்

ஆப்கனிடம் போராட்டம்

அதெல்லாம் பழைய கதை. அந்த தொடர்களில் இந்தியா பல பரிசோதனை முயற்சிகள் செய்தது. இப்போது இந்தியா முழு பலத்துடன் ஆடுகிறது... என்று நினைத்தால், உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா மீண்டும் தடுமாறி இருக்கிறது.

எச்சரிக்கை மணி

எச்சரிக்கை மணி

இது எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. இந்தியா சிறிய அணிகளுக்கு எதிராக சரியாக திட்டங்கள் போடுவதில்லை என்பதே இந்த தடுமாற்றத்துக்கு காரணமாக இருக்கலாம். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிராக திட்டமிடுவது போல கடைசி வரை இறங்கி, ஆழ்ந்து சிந்தித்து இந்தியா திட்டமிட வேண்டும்.

கவனம்

கவனம்

அப்படி திட்டமிட்டால், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேச அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றியை பெறலாம். இலங்கை, வங்கதேசம் இரண்டும் தங்கள் பலவீனங்களை மீறி உலகக்கோப்பை தொடரில் வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 24, 2019, 16:27 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
Cricket World cup 2019 : India’s real test continue even after Afghanistan match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X