For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை கோட்டை விட்ட கேன் வில்லியம்சன்!

Recommended Video

Kane williomson Pressmeet: பைனலில் எங்களுக்கு எதிராக நிறைய விஷயங்கள் நடைபெற்றன..!! கேன் வில்லியம்சன்

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அம்பயர்களின் தவறான தீர்ப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக ஓவர்த்ரோ செய்யப்பட்ட பந்து பவுண்டரியை எட்டிய போது ஆறு ரன்கள் கொடுத்தனர் அம்பயர்கள்.

விதிப்படி அது தவறு, ஐந்து ரன்கள் தான் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். அந்த குளறுபடி குறித்து கேன் வில்லியம்சன் பேசி இருக்கிறார். என்ன நடந்தது?

அந்த ஓவர்த்ரோ

அந்த ஓவர்த்ரோ

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை, நியூசிலாந்து பீல்டர் எறிந்து ரன் அவுட் செய்ய முயன்றார். அப்போது இரண்டாவது ரன் ஓடி வந்த பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்ட பந்து, பவுண்டரியை எட்டியது.

ஆறு ரன்கள்

ஆறு ரன்கள்

பந்தை பீல்டர் எறிந்த போது பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன் மட்டுமே ஓடி இருந்தார். இரண்டாவது ரன்னை அவர் ஓடி முடித்திருக்கவில்லை. விதிப்படி அந்த இடத்தில் ஐந்து ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அம்பயர்கள்பவுண்டரிக்கு நான்கு ரன்களும், ஓடி முடித்த ரன்கள் கணக்கில் இரண்டு ரன்களும் சேர்த்து ஆறு ரன்கள் கொடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி போட்டியை டை செய்தது. பின் சூப்பர் ஓவரையும் டை செய்து பவுண்டரி கணக்கை வைத்து உலகக்கோப்பை வென்றது.

எனக்கு தெரியாது

எனக்கு தெரியாது

இது பற்றி முதன் முறையாக நியூசிலாந்து பத்திரிக்கை ஒன்றில் கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். "அந்த சமயத்தில் நான் ஃபைன் ரன்கள் குறித்த விதிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்கவில்லை. எப்போதும் போல அம்பயரை நம்பினோம். அப்போது இருந்த சூழ்நிலையில், பல நூறு விஷயங்களோடு அதை கலந்ததால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கலாம்" என்றார்.

யாருக்குமே தெரியாது

யாருக்குமே தெரியாது

உண்மையில், அந்த விதி குறித்து மிகச் சில கிரிக்கெட் வீரர்களுக்கே தெரிந்து இருந்தது. சில கிரிக்கெட் இணையதளங்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இது குறித்து பேசிய பின்பே, கிரிக்கெட் உலகம் இறுதிப் போட்டியில் நடந்த தவறு குறித்து தெரிந்து கொண்டது.

ஆச்சரியம் இல்லை

ஆச்சரியம் இல்லை

அதனால், நியூசிலாந்து கேப்டன் அந்த விதி பற்றி தெரியாது என கூறுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அதை அவர் முன்பே தெரிந்து கொண்டிருந்தால் ஏமாந்து போய், உலகக்கோப்பை வெற்றியை கோட்டை விட்டிருக்க மாட்டார்.

Story first published: Wednesday, July 17, 2019, 18:34 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
Cricket World cup 2019 : Kane Williamson was not aware of overthrow rules
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X