For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி

Recommended Video

3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு... என்னதான் உண்மை ?

ஃப்ளோரிடா : பிரபல ரெஸ்லிங் (WWE) வீரர் பிராக் லெஸ்னர் மற்றும் அவரது வக்கீல் பால் ஹேமன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா மற்றும் ரன்வீர் சிங் மீது வழக்கு போட்டுள்ளதாக சில நாட்கள் முன்பு கூறப்பட்டது.

முதலில் அதை யாரும் நம்பவும் இல்லை. பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், ரன்வீர் சிங் மற்றும் பண்டியாவிடம் இருந்து இது குறித்து எந்த பதிலும் வரவில்லை.

உண்மை தான்

உண்மை தான்

WWE ரெஸ்லிங் என்றாலே நிறைய விளம்பரத்துக்காக ஏதாவது செய்வார்கள் என்பதால் இதுவும் அப்படி ஒன்றாக இருக்கலாம் என்றே பலரும் எண்ணினர். ஆனால், தற்போது இந்தியன்எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்கு பெட்டி அளித்துள்ள பிராக் லெஸ்னரின் வக்கீல் பால் ஹேமன் உண்மையாகவே தான் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறி இருக்கிறார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இன் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்றார். அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பதிவு

ஹர்திக் பண்டியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவில், "சாப்பிடு. தூங்கு. ஆதிக்கம் செலுத்து. திரும்ப செய். (Eat. Sleep. Dominate. Repeat) என குறிப்பிட்டு இருந்தார். இந்த நான்கு வார்த்தைகளில் மூன்று வார்த்தைகள் தான் சிக்கலுக்கு காரணம்.

அந்த வாசகம்

ரெஸ்லிங் வீரர் பிராக் லெஸ்னர் குறித்து ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் குறிப்பிடும் போது, "சாப்பிடு. தூங்கு. கைப்பற்று. திரும்ப செய்" (Eat, Sleep, Conquer. Repeat) என்று கூறுவார்கள். இந்த வாசகத்துக்கான, காப்புரிமை பிராக் லெஸ்னர் மற்றும் அவரது வக்கீல் பால் ஹேமன் வசம் உள்ளது. பால் ஹேமன் தான் ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் இதை தொடர்ந்து கூறி பிரபலப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கு

தங்கள் காப்புரிமையை மீறி ரன்வீர் சிங் தங்கள் வாசகத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்று முதலில் அவரது பதிவிற்கு பதிலடி கொடுத்தார் பால் ஹேமன். அடுத்து, தான் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கூறினார்.

பால் ஹேமன் பேட்டி

பால் ஹேமன் பேட்டி

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்து இருக்கிறார் பால் ஹேமன். அவர் கூறுகையில், ஹர்திக் பண்டியா, ரன்வீர் சிங் இருவரும் எங்கள் வாசகத்தை திருடி விட்டார்கள். பிராக் லெஸ்னர் மற்றும் எனக்கு அந்த வாசகம் பெரும் பண மதிப்பு கொண்டது. அவர்கள் காப்புரிமையை மீறி இருக்கிறார்கள். இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் இதை செய்திருக்கக் கூடாது. அடுத்து என்ன நடக்கும் என்பது அவர்கள் கையில் தான் உள்ளது" என்றார்.

மூடி மறைக்கிறார்கள்

மூடி மறைக்கிறார்கள்

ஹர்திக் பண்டியா தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் நிலையில், இந்திய அணியோ அல்லது பண்டியாவோ இது குறித்து மூச்சு விடாமல் இருக்கிறார்கள். இது குறித்து பால் ஹேமன் கூறினார்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

எந்த புத்திசாலி வக்கீலாக இருந்தாலும், வழக்குகளின் போது வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு கூறுவார்கள். அதை தான் அவர்கள் செய்து வருகிறார்கள். பொதுவெளியில் இது நல்ல நகர்வு என்றாலும் நீண்ட நாட்களுக்கு இதை மறைக்க முடியாது என்றார்

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

பண்டியா அல்லது ரன்வீர் சிங் இந்த வழக்கு குறித்து பேசினால் மட்டுமே இந்திய மக்களுக்கு இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என தெரிய வரும். WWEஇல் நிறைய பொய் பித்தலாட்டங்கள் நடைபெறும் என்பதால், பால் ஹேமன் உண்மையாகவே வழக்கு போட்டுள்ளாரா என்பது இவர்கள் இருவரும் உண்மையை வெளியே சொன்னால் தான் தெரியும்.

Story first published: Monday, June 24, 2019, 19:23 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
Cricket World cup 2019 : Paul Heyman and Brock Lesnar sued Ranveer Singh and Hardik Pandya
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X