For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரை 11 உலகக்கோப்பை நடந்திருக்கு.. அதுல யார், யாரு ஜெயிச்சாங்கன்னு தெரியுமா?

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30 முதல் துவங்க உள்ளது. அதற்கான தயார்நிலையில் அனைத்து அணிகளும் உள்ளன.

இந்த ஆண்டு நடக்கப்போவது 12வது உலகக்கோப்பை தொடராகும். இதற்கு முன் 11 உலகக்கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. அதில் இந்தியா 2 ,முறை கோப்பை வென்றது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் எந்த அணிகள் வெற்றி பெற்றன என்பது குறித்து தெரியுமா? இதோ முழு விவரம் -

Cricket World Cup winners list from 1975 to 2015

1975 - வெஸ்ட் இண்டீஸ்

1979 - வெஸ்ட் இண்டீஸ்

1983 - இந்தியா

1987 - ஆஸ்திரேலியா

1992 - பாகிஸ்தான்

1996 - இலங்கை

1999 - ஆஸ்திரேலியா

2003 - ஆஸ்திரேலியா

2007 - ஆஸ்திரேலியா

2011 - இந்தியா

2015 - ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா 5, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா தலா 2, இலங்கை, பாகிஸ்தான் தலா 1 முறையும் கைப்பற்றி உள்ளனர். முன்னணி அணிகளான இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சும்மா இல்லை.. 10 கோடி.. சமூக வலைதளங்களில் தோனி, சச்சினை தூக்கி அடித்த விராட் கோலி!! சும்மா இல்லை.. 10 கோடி.. சமூக வலைதளங்களில் தோனி, சச்சினை தூக்கி அடித்த விராட் கோலி!!

இந்த முறை உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் அந்த அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அந்த அணி தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதோடு, வலுவான அணியாகவும் விளங்குகிறது.

இங்கிலாந்து அணிக்கு அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய பலம் குறைந்த அணிகள் மற்ற அணிகளை மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, May 18, 2019, 19:13 [IST]
Other articles published on May 18, 2019
English summary
Complete list of Cricket World Cup winners from 1975 to 2015. Which team won in every edition?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X