அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் Rohit Sharmaவின்சொத்து மதிப்பு இதுதான் | Oneindia Tamil

இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா உருவெடுத்துள்ளார். 2007ம் ஆண்டு இவர் அறிமுகமானாலும் 2013ம் ஆண்டு தான் அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல்

கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன் டிராப்பியின் ரோகித் சர்மாவை முதல் முதலில் ஓப்பனராக களமிறக்கினார் அப்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி. அன்று முதல் இன்று வரை தொடக்க வீரராக இந்திய அணியில் திகழ்ந்து வருகிறார்.

 பிசிசிஐ அளிக்கு வருமானம்

பிசிசிஐ அளிக்கு வருமானம்

பிசிசிஐ-ஆல் வருடத்திற்கு ஒருமுறை போடப்படும் ஒப்பந்தத்தில் ரோகித் சர்மா A+ எனப்படும் முதல் தர பிரிவில் உள்ளார். இதனால் இவருக்கு ஆண்டு வருமானமாக ரூ.7 கோடி தரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிசிசிஐ ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கு தனி ஊதியம் வழங்குகிறது. அதில் ரோகித் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என பெற்று வருகிறார்.

ஐபிஎல்

ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா. இவர் கடந்த 2018ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தின் போது மும்பை அணியில் முதல் வீரராக தக்கவைக்கப்பட்டார். அப்படியென்றால் ஒவ்வொரு சீசனுக்கும் ரூ. 15 கோடியை சம்பளமாக பெறுகிறார்.

விளம்பர வருமானம்

விளம்பர வருமானம்

மும்பை அணிக்காக ஜியோ விளம்பரம் மட்டுமல்லாமல் பல்வேறு விளம்பரங்களிலும் ரோகித் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது வேகா, டாக்டர். டிரஸ்ட், ஃபினான்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல தனியார் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவற்றை கணித்து பார்க்கும்போது விளம்பரங்களில் இருந்து மட்டும் ரோகித் சுமார் ரூ. 7 கோடி வருமானம் ஈட்டுகிறார் எனத்தெரிகிறது.

வீட்டின் மதிப்பு

வீட்டின் மதிப்பு

மும்பை நகரித்தில் உள்ள வார்லி என்ற இடத்தில் 6000 சதுர அடி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் ரோகித் சர்மா. 29வது மாடியில் இருக்கும் இந்த வீட்டில் இருந்து பார்த்தால் அரபிக் கடலின் காட்சி தெளிவாக இருக்கும். அவரின் அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடி ஆகும்.

கார் வகைகள்

கார் வகைகள்

ரோகித் சர்மா முதல் முதலில் வாங்கியது ஸ்கோடா லாரா காரை தான். அதுமட்டுமல்லாமல் அவரிடம், ஃபார்சூனர், பிஎம்டபள்யூ, ஃபார்முலா ஒன் ரேஸ் காரான பிஎம்டபள்யூ எம் 5 ரக கார், பென்ஸ், அவுடி உள்ளிட்ட பல ரக கார்களை தன்வசம் வைத்துள்ளார்.

சொத்த மதிப்பு

சொத்த மதிப்பு

இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 170 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அவரின் வயது 34 ஆகும். அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரோகித் சர்மா, இன்னும் 4 - 5 ஆண்டுகள் இந்திய அணியில் தொடர்வார் என தெரிகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Cricketer Rohit Sharma's Net Worth and Full Salary Details
Story first published: Sunday, May 16, 2021, 18:49 [IST]
Other articles published on May 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X