19வது ஓவரை வெளுத்துவிட்ட ஜடேஜா.. தவிடுபொடியான KKR-ன் "கடைசி 7 ஓவர்" ஸ்டிராடஜி - செம வெற்றி

அபுதாபி: கொல்கத்தா அணியின் மிகப்பெரிய பலமான "மிஸ்ட்ரி" ஸ்பின்னர்ஸ்களின் பந்துகளை அப்படி இப்படி என சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.26) டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன.

BREAKING: டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி.. மீண்டும் ரத்தாகிறதா ஐபிஎல் தொடர் - 6 வீரர்கள் தனிமை! BREAKING: டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி.. மீண்டும் ரத்தாகிறதா ஐபிஎல் தொடர் - 6 வீரர்கள் தனிமை!

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

 ருதுராஜ் - டு பிளசிஸ்

ருதுராஜ் - டு பிளசிஸ்

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ராணா 37 ரன்களும் எடுத்தனர். இறுதிக் கட்டத்தில் ரஸல் 20 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் விளாசி சிறப்பான கேமியோ ரோல்ஸ் விளையாட, அந்த அணி 171 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் பிராவோவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட சாம் கர்ரனின் 4 ஓவர்களில் 56 ரன்கள் விளாசப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் தொடக்க வீரர்களாக இன்னிங்ஸை தொடங்கினர்.

 மிஸ்ட்ரி ஸ்பின்னர்ஸ் காலி

மிஸ்ட்ரி ஸ்பின்னர்ஸ் காலி

இதில், ருதுராஜ் - டு பிளசிஸ் ஜோடி வழக்கம் போல் எதிரணி பவுலர்களை அடித்து விளாசத் தொடங்கியது. ஃபாஸ்ட், ஸ்பின் என்று மாறி மாறி கொல்கத்தா பவுலர்களை இருவரும் விளாசினார்கள். குறிப்பாக, கொல்கத்தா அணியின் பலமான மிஸ்ட்ரி ஸ்பின்னர்களான சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஓவர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார்கள். அதிலும், 2 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் ஓவரில் 25 ரன்கள் விளாசப்பட்டது. எகானமி 12.50. எனினும், ரஸல் ஓவரில் எட்ஜ் ஆன ருதுராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 2 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

 தடுமாறிய வருண்

தடுமாறிய வருண்

அதேபோல், டு பிளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது பிரசித் ஓவரில் கேட்ச்சானார். டு பிளசிஸ் சிக்ஸர்கள் அடிக்கவில்லை என்றாலும் 7 பவுண்டரிகளை விளாசியிருந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர். அதேபோல், மற்றொரு மிஸ்ட்ரி ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி ஓவரிலும் பெரிய தாக்கம் இல்லை. 2 ஓவர்கள் வீசிய வருண் 14 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன்பிறகும் அவரால் பவுலிங்கில் பெரிய இம்பேக்ட் ஏற்படுத்த முடியவில்லை. எனினும், சென்னை கேப்டன் தோனியை அவர் போல்டாக்கியது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

 வெளுத்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்ஸ்

வெளுத்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்ஸ்

கொல்கத்தா தனது சமீபத்திய போட்டிகளில் முக்கிய ஸ்டிராடஜி ஒன்றை பின்பற்றி வருகிறது. அதாவது, கடைசி 7 ஓவர்களில் சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு 4 ஓவர்களை வீச வைப்பது தான் அந்த ஸ்டிராடஜி. அவர்களது மிஸ்ட்ரி ஸ்பின் பந்துவீச்சில் எப்பேர்ப்பட்ட எதிரணியாக இருந்தாலும் பேட்டிங்கை சீர்குலைப்பதே அவர்களது வியூகம். இன்றும் அதே வியூகத்தை தான் கொல்கத்தா பின்பற்றியது. ஆனால், இங்கு எதிரணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆச்சே! மிஸ்ட்ரி ஸ்பின்னர்ஸாவது... இதாவது.. என்று கேஷுவலாக அவர்களை விளாசி வெற்றியை உறுதி செய்தனர் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள். இத்தனைக்கும் தனது கடைசி சீசனில் செஷனில் பந்து வீச வந்த சுனில் நரைன், அம்பதி ராயுடுவின் விக்கெட்டை கைப்பற்றினாலும், அவரது ஓவரை கங்கணம் கட்டி விளாசியது சென்னை. 3 ஓவர்களுக்கே அவர் 37 ரன்களை வாரி வழங்கிவிட்டார். கடைசி ஓவரில் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட அந்த ஓவரில் 2 விக்கெட் விழுந்தாலும், இறுதி பந்தில் 1 ரன் அடிக்கப்பட, 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக போட்டியை வென்றது சிஎஸ்கே.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 5 - October 19 2021, 03:30 PM
ஸ்காட்லாந்து
பாபுவா நியூ கினி
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
csk batsmans targeted kkr's mystery spinners - வருண்
Story first published: Sunday, September 26, 2021, 19:35 [IST]
Other articles published on Sep 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X