மீண்டும் பாஸிட்டிவ்.. மைக் ஹசி 'ஹெல்த்'.. எப்படியிருக்கு? - சிஎஸ்கே ரசிகர்கள் பிரார்த்தனை

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தொடர்ந்து மைக் ஹஸ்ஸி தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்.

Michael Husseyஆல் CSKவுக்கு சிக்கல்! Maldives க்கு போக முடியாது | OneIndia Tamil

இந்தியாவில் கொரோனா 2வது அலை புயல் போல் வீச, தினம் ஆயிரக்கணக்கோர் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை, மருந்துக்கு பற்றாக்குறை என்று நாடே திண்டாடி வருகிறது.

அது வெறும் தீ பொறிதான்.. ஒரு நாள் பெரும் தீ ஆகும்.. இளம் வீரர் குறித்து புகழ்ந்து தள்ளும் கவாஸ்கர்

இந்த சூழலில் தான் ஐபிஎல் 2021 தொடரும் நடந்து வந்தது. பயோ-பபுள் எனும் பாதுகாப்பு அரணுக்குள் வீரர்கள் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அதையும் மீறி கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட அரண்டு போனது பிசிசிஐ.

 சிக்கிய ஹசி

சிக்கிய ஹசி

பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, சன்ரைசர்ஸ் அணி வீரர் ரிதிமான் சாஹா ஆகியோருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியாக ஐபிஎல் 2021 தொடரை தற்காலிகமாக நிறுத்துவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட மற்றொரு முக்கிய சிஎஸ்கே பிரபலம், பேட்டிங் கோச் மைக் ஹசி.

 மீண்டும் கொரோனா

மீண்டும் கொரோனா

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹசிக்கு கடந்த மே 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா சிகிச்சை மேற்கொண்டதில், மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரை டிஸ்சார்ஜ் செய்யாத மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.

 14 நாட்கள்

14 நாட்கள்

இந்த நிலையில், மைக் ஹசியின் உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல் குறைந்து அவர் நலமுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இன்று மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், அவருக்கு 'நெகட்டிவ்' என்று ரிசல்ட் வரும் பட்சத்தில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தலுக்காக மாலத்தீவு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, பிறகு ஆஸ்திரேலியா செல்வார் என்று தெரிகிறது.

 5 மாத இடைவெளி

5 மாத இடைவெளி

ஐபிஎல் 2021 தொடர், இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. அதேசமயம், இந்த வருட இறுதியில், உலகக்கோப்பை டி20 தொடர் முடிந்தவுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் இடைவெளி இருப்பதால், ஹசி ஓய்வெடுக்கவும், மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக திரும்பவும் போதுமான நேரம் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
csk batting coach mike hussey corona - ஐபிஎல் 2021
Story first published: Thursday, May 13, 2021, 12:05 [IST]
Other articles published on May 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X