For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பத்தி அறிவிக்கப்படல... ஆனா என்னங்க எங்க வேலையை நாங்க பாக்கறோம்... சூப்பர் சிஎஸ்கே!

சென்னை : ஐபிஎல் போட்டிகளுக்கான ஆயத்த பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதத்தில் ஐபிஎல் 2021 ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆயினும் ஐபிஎல் 2021 தொடர் நடைபெறும் தேதிகள் மற்றும் இடம் குறித்து பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தாமல் உள்ளது.

இந்நிலையில் எது எப்படி நடந்தாலும் எங்கள் வேலைகளை நாங்கள் பார்க்கிறோம் என்று களமிறங்கியுள்ளது சிஎஸ்கே. அணியின் பயிற்சி முகாம் வரும் 11ம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது. தோனியும் இதில் பங்கேற்கவுள்ளார்.

அறிவிக்காத பிசிசிஐ

அறிவிக்காத பிசிசிஐ

ஐபிஎல் 2021 தொடருக்கான ஆயத்த பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சீசனுக்கான போட்டிகள் யூஏஇயில் சிறப்பான வகையில் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த சீசன் எப்போது எங்கே எப்படி நடக்கும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிக்கவில்லை.

அணியை பலப்படுத்திய அணிகள்

அணியை பலப்படுத்திய அணிகள்

ஆயினும் கடந்த மாதத்தில் சென்னையில் ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் 8 ஐபிஎல் அணிகளும் சிறப்பான வகையில் பங்கேற்று தங்களது அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை பலப்படுத்தியுள்ளன.

ஐபிஎல் 2021 இந்தியாவில் நடக்குமா?

ஐபிஎல் 2021 இந்தியாவில் நடக்குமா?

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஐபிஎல் அணிகளிடையே எழுந்துள்ளது. ஆயினும் இந்தியாவின் லீக் போட்டியான ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதுதான் சிறப்பானது என்று பிசிசிஐ தரப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

11ம் தேதி துவக்கம்

11ம் தேதி துவக்கம்

இந்நிலையில் பிசிசிஐ தேதிகளை அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் தாங்கள் தங்களது கடமையை செய்வோம் என்று சிஎஸ்கே அணி களத்தில் இறங்கியுள்ளது. வரும் 11ம் தேதி முதல் அணியின் பயிற்சி முகாமை சென்னையில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகளில் முதல் நாளிலிருந்தே கேப்டன் எம்எஸ் தோனி ஈடுபடுவார் என்றும் கூறியுள்ளது.

பயோ பபள் முறைப்படி பயிற்சி

பயோ பபள் முறைப்படி பயிற்சி

அணியின் கேப்டன் எம்எஸ் தோனியிடம் கலந்தாலோசித்த பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அணியின் அனைத்து வீரர்களும் குழுக்களாக சென்னைக்கு வரவுள்ளதாகவும் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி சிறப்பான வகையில் பயோ பபள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, March 1, 2021, 17:31 [IST]
Other articles published on Mar 1, 2021
English summary
The camp has been initiated after consultation with team Captain Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X