For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2022 ஐபிஎல்-ல் சிஎஸ்கே நிலை என்ன? வீரர்கள் தக்கவைப்பு குறித்த சஸ்பன்ஸை உடைத்த தோனி.. முழு விவரம்

சென்னை: அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவேனா மாட்டேனா என்பதில் இன்னமும் சஸ்பன்ஸ் வைத்து வருகிறார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக 2 அணிகள் இணைக்கப்படவுள்ளன. இதோடு ஐபிஎல் மெகா ஏலமும் நடைபெறவுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணியின் 3- 4 வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவார்கள்..

இந்திய அணிக்குள் மீண்டும் வரும் தோனி.. 2வது டி20-ல் பங்கேற்க திடீர் ட்விஸ்ட்.. காரணம் என்ன? இந்திய அணிக்குள் மீண்டும் வரும் தோனி.. 2வது டி20-ல் பங்கேற்க திடீர் ட்விஸ்ட்.. காரணம் என்ன?

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

2 புதிய அணிகள் வருவதால், ஏலத்தின் விதிமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். Right to match card முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கலாம் என அணிகள் குழப்பத்தில் உள்ளது. எனினும் தோனியை கண்டிப்பாக தக்கவைப்போம் என சிஎஸ்கே மட்டும் தெளிவான முடிவை அறிவித்தது.

அதிக ஊதியம்

அதிக ஊதியம்

இது ஒருபுறம் இருக்க சிஎஸ்கேவுக்காக அடுத்தாண்டு பங்கேற்க தோனி பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது போல தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, சிஎஸ்கேவின் எதிர்காலத்தை மனதில் வைத்துதான் எந்த முடிவும் எடுக்கப்படும். நான் அடுத்தாண்டு விளையாடுகிறேனா என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை எனத்தெரிவித்தார்.

 தோனியின் பதில்

தோனியின் பதில்

இந்நிலையில் இன்று நடைபெற்ற சிஎஸ்கேவின் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸின் 75வது ஆண்டு விழாவில் தோனி மீண்டும் சஸ்பன்ஸ் வைத்து சென்றுள்ளார். சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தோனி, அது குறித்து இனிமேல் தான் யோசிக்க வேண்டும். தற்போது நவம்பர் மாதம் தான் நடந்து வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தான் ஐபிஎல் நடைபெறவுள்ளது. எனவே பொறுமை காப்போம்.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

நான் விளையாடுவது குறித்து முன்பே கூறிவிட்டேன். புதிதாக 2 அணிகள் வரவுள்ளது. பிசிசிஐ-ன் முடிவுகளை பொறுத்துதான் முடிவுகள் எடுக்கப்படும். அவை சிஎஸ்கேவின் எதிர்காலத்திற்கும் நல்லதாக இருக்க வேண்டும். தக்கவைப்போர் பட்டியலில் நான் இடம்பெறுவது முக்கியமல்ல, சிஎஸ்கே அணிக்கு சிக்கல் வராதது போன்று பலமான அணியை உருவாக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு உதவப்போகும் வீரர்களை தான் யோசித்து வருகிறோம் என தோனி கூறியுள்ளார். இதன் மூலம் குழப்பம் இன்னும் நீடித்துக்கொண்டே வருகிறது.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம்

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு 40 வயதாகிவிட்டது. அவர் அடுத்தாண்டு விளையாடினாலும் தொடரின் பாதிலேயே ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அவரை நம்பி ரூ.16 கோடியை சிஎஸ்கே நிர்வாகம் இழக்க தயாராக இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Story first published: Saturday, November 20, 2021, 18:32 [IST]
Other articles published on Nov 20, 2021
English summary
CSK Captain MS Dhoni breaks silence on his possibility of playing in IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X