For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இத்தனை கோடியா?? எம்.எஸ்.தோனி செய்துவரும் தொழில்கள்.. கிரிக்கெட் பார்ட் டைம் தான் போலயே- முழு லிஸ்ட்

சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி செய்து வரும் தொழில்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி, ஐபிஎல்-ல் மட்டும் கலக்கி வருகிறார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- இறுதி போட்டியில் மாணவனை எதிர்கொள்ளும் ஆசிரியர் நடால்.. 4 ஆண்டில் அதிசயம்பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- இறுதி போட்டியில் மாணவனை எதிர்கொள்ளும் ஆசிரியர் நடால்.. 4 ஆண்டில் அதிசயம்

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் கலந்துக்கொள்வார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 தோனியின் முதலீடுகள்

தோனியின் முதலீடுகள்

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தோனி என்னதான் செய்கிறார் என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. அதற்கான விடை தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறையிலும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி தோனி பெரும் தொழிலதிபராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ஆனால் விவசாயம் மட்டுமே வெளியே தெரிகிறது.

விவசாயம்

விவசாயம்

ஓய்வுக்கு பிறகு தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் விவசாயம் செய்து வருகிறார். இதில் காய்கறிகள், பல வகைப்பட்ட பழங்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக துபாய்-க்கு தோனி விற்பனை செய்து வருகிறார். இதன் லாபம் ஏகபோகத்திற்கு உள்ளது.

 ஆடை துறை

ஆடை துறை

seven ( செவென் ) எனும் நிறுவனம் விளையாட்டு துறைக்கான ஜெர்ஸிகள், ஆடைகள், காலணிகள், ஷூ உள்ளிட்ட பலவற்றை விற்பனை செய்து வருகிறது. இதன் முக்கிய பங்குதாரர் எம்.எஸ்.தோனி தான் ஆகும். இதன் விளம்பர தூதரும் அவரே ஆகும்.

 விளையாட்டு துறை

விளையாட்டு துறை

இந்தியாவில் ஐபிஎல்-ஐ போன்றே, கால்பந்து ஆட்டத்திற்காக நடத்தப்படும் தொடர் தான் ஐஎஸ்எல். மிகவும் பிரபலமான இந்த தொடரில் சென்னையின் எஃப்சி அணியின் முக்கிய பங்குதாரர் தோனி ஆகும்.

ஜிம் மற்றும் ஃபிட்னஸ்

ஜிம் மற்றும் ஃபிட்னஸ்

தோனி உடற்பயிற்சி மீது ஆர்வம் கொண்டவர். எனவே அதிலும் முதலீடு செய்துள்ளார். ஸ்போர்ட்ஸ் ஃபிட் வேர்ல்ட் ( Sportsfit world Pvt.ltd ) என்ற பெயரில் இந்தியா முழுக்க உள்ள 200க்கும் மேற்பட்ட ஜிம்களை நடத்தி வருகிறார்.

ஹோட்டல் துறை

ஹோட்டல் துறை

தோனி ஒரு தங்கும் விடுதி ஒன்றையும் வைத்துள்ளார் என்பது ஆச்சரியத்தை தரலாம். ஆம், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், தோனிக்கு சொந்தமாக மஹி ரெஸிடன்சி (mahi residency) என்ற தங்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இருப்பதிலேயே குறைவாக முதலீடு செய்தது இதில் தான் எனக்கூறப்படுகிறது.

உணவுத்துறை

உணவுத்துறை

7INK Brews எனப்படும் உணவு மற்றும் திண்பண்டங்கள் உற்பத்தி நிறுவனத்தில் ஒரு முக்கிய பங்கு தாரராக தோனி இருக்கிறார். இந்த நிறுவனம், காப்டர் 7 என்ற பெயரில் சாக்லேட் மற்றும் ஜூஸ்களை விளம்பரப்படுத்தியது. தோனியின் ஹெலிகாப்டன் ஷாட் மற்றும் 7 என்ற ஜெர்ஸி நம்பரை வைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது.

டிஜிட்டல் துறை

டிஜிட்டல் துறை

கடந்த 2021ம் ஆண்டு khata book என்ற டிஜிட்டல் என்ற தொழில் நிறுவனத்தில் முதலீடு செய்தார். தற்போது வரை அந்த நிறுவனத்தின் மதிப்பு 29 மில்லியன் டாலர்களாக உயர்ந்து நிற்கிறது. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதரும் தோனி தான் ஆகும்.

 ட்ரோன்கள்

ட்ரோன்கள்

சென்னையை சேர்ந்த பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான "கருடா ஏரோ ஸ்பேஸ்" -ல் தோனி முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனம் விவசாயத்திற்கு உதவும் நவீன ட்ரோன்களை உற்பத்தி செய்யவுள்ளது. தோனி ஏற்கனவே விவாசயம் செய்துவரும் சூழலில், இதில் தடம்பதித்துள்ளார்.

Story first published: Monday, June 6, 2022, 20:52 [IST]
Other articles published on Jun 6, 2022
English summary
MS.Dhoni's investments and business ( எம்.எஸ்.தோனி தொழில்கள் மற்றும் முதலீடுகள் ) கிரிக்கெட் வீரர் தோனி செய்துள்ள முதலீடுகள் மற்றும் தொழில்கள் குறித்து பார்க்கலாம்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X