ஜடேஜாவை அன் ஃபாலோ செய்த சிஎஸ்கே? சிஎஸ்கேவில் ஜடேஜா எதிர்காலம் என்ன? மௌனத்தை கலைத்த காசி விஸ்வநாதன்

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து முன்னாள் கேப்டன் ஜடேஜா காயம் காரணமாக விலகினார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பெரிய பிரளயமே வெடித்துள்ளது.

கேப்டன் பதவியில் ஜடேஜா சுதந்திரமாக செயல்பட, சிஎஸ்கே நிர்வாகம் விடவில்லை என்றும், கேப்டன்சி செய்வதற்கு ஜடேஜா சரியான நபர் இல்லை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து ஜடேஜா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி திரும்பினார்.

ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்.. காயம் தான் காரணமா? இல்லை விரிசலா? ரெய்னாவுக்கு நேர்ந்த அதே கதிஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்.. காயம் தான் காரணமா? இல்லை விரிசலா? ரெய்னாவுக்கு நேர்ந்த அதே கதி

ஜடேஜா காயம் உண்மையா?

ஜடேஜா காயம் உண்மையா?

இந்த நிலையில், பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஃபில்டிங் செய்த போது ஜடேஜா கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் எவ்வித மருத்துவ உதவியும் எடுத்து கொள்ளாமல் ஆட்டத்தில் ஜடேஜா தொடர்ந்தார்.இதனால் ஜடேஜாவுக்கு பெரிய காயம் ஏதும் இல்லை என ரசிகர்கள் நினைத்தனர்.

வெளியேற்றிய சிஎஸ்கே?

வெளியேற்றிய சிஎஸ்கே?

ஆனால், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா உட்கார வைக்கப்பட்டார். இது தான் சர்ச்சைக்கு வித்திட்டது. தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகிவிட்டதாக சிஎஸ்கேவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சிஎஸ்கே நிறுத்திவிட்டதாக தகவல் வெளியானது. ரெய்னா பாணியில் ஜடேஜாவையும் சிஎஸ்கே வெளியேற்றிவிட்டதாக புகார் எழுந்தது.

சிஎஸ்கே விளக்கம்

சிஎஸ்கே விளக்கம்

இதனிடையே, ஜடேஜாவின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா எப்போதும் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவித்தார். ஜடேஜா அடுத்த சீசனிலும் தொடர்ந்து சிஎஸ்கேக்காக விளையாடுவார் என குறிப்பிட்டார்.

IPL 2022 CSK vs MI: முரட்டுத்தனமான மோதல்! Predictable 11 என்ன? | OneIndia Tamil
இன்ஸ்டாகிராம் விவகாரம்

இன்ஸ்டாகிராம் விவகாரம்

காயம் காரணமாக மருத்துவக்குழு அளித்துள்ள அறிக்கையின் படி தான் சென்னை அணியிலிருந்து ஜடேஜா விலக்கி கொள்ளப்பட்டதாகவும், இதை தவிர வேறு காரணமில்லை என்றும் காசி விஸ்வநாதன் கூறினார். மேலும் சமூக வலைத்தளத்தில் ( இன்ஸ்டாகிராம் விவகாரம்) நடைபெறும் விஷயங்கள் குறித்து எனக்கு தெரியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK CEO Kasi Vishwanathan on Jadeja future in team ஜடேஜாவை அன் ஃபாலோ செய்த சிஎஸ்கே? சிஎஸ்கேவில் ஜடேஜா எதிர்காலம் என்ன? மௌனத்தை கலைத்த காசி விஸ்வநாதன்
Story first published: Thursday, May 12, 2022, 12:37 [IST]
Other articles published on May 12, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X