ஒரு பிரச்னை போனா இன்னோனு.. சிஎஸ்கே-க்கு வந்த சோதனை.. மைக் ஹசிக்கு கொரோனா நெகட்டீவ்.. ஆன ஒரு சிக்கல்

சென்னை: சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பயிற்சியாளர் மைக் ஹசி குணமடைந்துவிட்டார். எனினும் அவர் ஆஸ்திரேலியா திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'.. தரமான சம்பவம்.. மிரண்டுட்டேன் - சுனில் கவாஸ்கர்

முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு உறுதியான கொரோனா அடுத்தடுத்து சிஎஸ்கே, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கும் பரவியிருக்கிறது.

சென்னை

சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு தொற்று உறுதியான நிலையில் அடுத்ததாக பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹசிக்கும் பரவியது. இதனையடுத்து அவர் டெல்லியில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குட் நியூஸ்

குட் நியூஸ்

இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. மேலும் அவர் தாய் நாட்டிற்கு செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

மாலத்தீவில் தஞ்சம்

மாலத்தீவில் தஞ்சம்

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வரும் மே 15ம் தேதி வரை தடைவிதித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலியர்கள் 37 பேர் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை ஆஸ்திரேலிய அரசின் அனுமதி கிடைத்துவிட்டால் அவர்களை வரும் மே 16ம் தேதி அங்கிருந்து தனி விமானம் மூலம் அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் மைக் ஹசியும் மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்வார் என திட்டம் போடப்பட்டது.

அடைக்கப்பட்ட கதவுகள்

அடைக்கப்பட்ட கதவுகள்

ஆனால் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வருபவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்த அரசு தடைவிதித்துள்ளது. இதனால் மைக் ஹசி குணமடைந்த பின்னரும் அவர் மாலத்தீவுக்கு செல்ல முடியாது. மேலும் ஒருவேளை இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தடை நீடிக்கப்பட்டால் மைக் ஹசி சென்னையிலேயே தங்க வேண்டியது தான். இதுகுறித்து பேசியுள்ள அந்த அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மைக் ஹசி தற்போது தான் குணமடைந்துள்ளார். அவரை எப்போது வீட்டிற்கு அனுப்புவது, எங்கிருந்து ( மாலத்தீவு or ஆஸ்திரேலியா) அனுப்புவது என முடிவு எடுக்கப்படவில்லை எனக்கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK Coach Michael Hussey recovers from COVID-19, Planning to fly home soon
Story first published: Saturday, May 15, 2021, 10:40 [IST]
Other articles published on May 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X