ரெய்னா வேண்டாம்.. அந்த வீரரை வைத்து சமாளிச்சுக்கலாம்.. கழட்டி விட்ட தோனி.. சிஎஸ்கே அதிரடி திட்டம்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் இடம் பிடிப்பது கடினம் என கூறப்படுகிறது.

கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா இல்லாமல் அணியை தேர்வு செய்ய திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைவது கடினமே என கூறப்படுகிறது. முதல் போட்டி செப்டம்பர் 19 அன்று துவங்கும் நிலையில், சிஎஸ்கே தில்லாக இந்த முடிவை எடுத்துள்ளது.

3வது வீரரை இழக்கும் சிஎஸ்கே? இளம் வீரருக்கு மீண்டும் கொரோனா பாஸிடிவ்.. கடும் சிக்கலில் தோனி

சிஎஸ்கே அணியின் நிலை

சிஎஸ்கே அணியின் நிலை

சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் ஆகிய இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. 14 நாள் குவாரன்டைன் முடிந்து தீபக் சாஹர் பாதிப்பில் இருந்து மீண்டு, பிற சிஎஸ்கே வீரர்களுடன் பயிற்சியில் இணைந்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா விலகல்

சுரேஷ் ரெய்னா விலகல்

சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது சுரேஷ் ரெய்னா துபாயில் இருந்து கிளம்பி இந்தியா சென்றார். அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே ரெய்னா தான் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளதாக கூறியதால் அதில் குழப்பம் நீடிக்கிறது.

ஹர்பஜன் சிங் இல்லை

ஹர்பஜன் சிங் இல்லை

அடுத்து மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணத்தால் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ரெய்னா, ஹர்பஜன் சிங் இருவருக்கும் சிஎஸ்கே அணி மாற்று வீரர்களை இதுவரை தேர்வு செய்யவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

ருதுராஜ் சந்தேகம்

ருதுராஜ் சந்தேகம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில், ரெய்னாவை அழைப்பது குறித்து சிஎஸ்கே அணி திட்டமிடும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறான திட்டத்தை கையில் எடுத்துள்ளார் கேப்டன் தோனி.

தோனி எடுத்த தில் முடிவு

தோனி எடுத்த தில் முடிவு

கேப்டன் தோனி சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் வேறு ஒரு வீரரை மூன்றாம் வரிசையில் ஆட வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சுரேஷ் ரெய்னா மீண்டும் வர விரும்பினாலும், அவர் வேண்டாம் என்ற முடிவுக்கே தோனி வந்து விட்டதாக தெரிகிறது.

யார் அந்த வீரர்?

யார் அந்த வீரர்?

சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக தோனி களமிறக்க உள்ள அந்த வீரர் முரளி விஜய் தான். அவர் பயிற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். கடந்த இரண்டு சீசன்களில் முரளி விஜய் மிகச் சில போட்டிகளில் மட்டுமே ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்னா வர வாய்ப்பு உள்ளதா?

ரெய்னா வர வாய்ப்பு உள்ளதா?

சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு வந்தாலும் அவர் குவாரன்டைனில் இருக்க வேண்டும். அவர் துபாய் வரும் முன் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து இருக்க வேண்டும். செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் துவங்க உள்ள நிலையில், ரெய்னா சிஎஸ்கே அணியில் சேர்ந்தாலும் பின் பாதியில் தான் சேர முடியும்.

அபாயம் உள்ளது

அபாயம் உள்ளது

ரெய்னா போதிய பயிற்சி இன்றி பாதியில் அணியில் சேர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. அதே சமயம், ரெய்னாவுக்கு மாற்று வீரரையும் தேர்வு செய்யாத சிஎஸ்கே, பாதி தொடரில் சில வீரர்கள் காயம் அடைந்தால் அணித் தேர்வில் கடும் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Chennai Super KIngs (CSK) Latest News Updates in Tamil : CSK's Dhoni decided not to accept Suresh Raina back says sources. Murali Vijay will replace Suresh Raina. This decision could affect CSK in the middle of the tournament as they didn’t find a replacement for Raina yet.
Story first published: Wednesday, September 16, 2020, 12:34 [IST]
Other articles published on Sep 16, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X