For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேகேஆருடன் மோதும் சிஎஸ்கே... கேகேஆரின் பிளே-ஆப் கனவு நனவாகுமா?

துபாய் : ஐபிஎல்லின் 49வது லீக் போட்டியாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதவுள்ளன.

பிளே-ஆப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேற்றப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த போட்டியில் ஆர்சிபி அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தன்னுடைய பிளே-ஆப் கனவை நனவாக்கிக் கொள்ள இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கேகேஆர் அணி உள்ள நிலையில், இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சிஎஸ்கே -கேகேஆர் மோதல்

சிஎஸ்கே -கேகேஆர் மோதல்

ஐபிஎல்லின் 49வது லீக் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறுவது பிளே-ஆப் கனவுடன் உள்ள கேகேஆர் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

கொல்கத்தா அணியுடன் மோதல்

கொல்கத்தா அணியுடன் மோதல்

பிளே-ஆப் சுற்றிலிருந்து வெளியேறியுள்ள சிஎஸ்கே, இன்றைய போட்டியில் கேகேஆருடனும் வரும் ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனும் மோதவுள்ளது. இதையடுத்து அந்த அணி வீரர்கள் இந்தியா திரும்பவுள்ளனர். பிளே-ஆப்பிலிருந்து வெளியேறிய நிலையிலும் கடந்த ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே சிறப்பாக விளையாடியது.

5வது இடத்தில் கேகேஆர்

5வது இடத்தில் கேகேஆர்

ஆனால் சிஎஸ்கேவிற்கு எதிரான இந்த இரு போட்டிகளும் அந்த அணிகளின் பிளே-ஆப் கனவை நனவாக்கும் போட்டிகள். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திலும் கேகேஆர் 5வது இடத்திலும் உள்ளன. 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளை பெற்றுள்ளது கேகேஆர்.

கில், ராணா மீது நம்பிக்கை

கில், ராணா மீது நம்பிக்கை

இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் கேகேஆர் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். கடந்த 3 போட்டிகளில் முதல் 3 விக்கெட்டுகளை அந்த அணி விரைவிலேயே இழந்தது. மேலும் துவக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் மற்றும் ராணாவை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. இதேபோல இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் நரேனும் இன்றைய போட்டியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள்

சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள்

இதேபோல சிஎஸ்கேவின் கடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், மேலும் இளைஞர்கள் சிறப்பாக பயன்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே கேகேஆரின் லாக்கி பெர்குசனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்றைய போட்டியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரேனும் சிறந்த முறையில் கைகொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, October 29, 2020, 12:48 [IST]
Other articles published on Oct 29, 2020
English summary
KKR will hope that the opening pair of Shubman Gill and Rana can lay the foundation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X