For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்களை எல்லாம் வைச்சுகிட்டு தோனி என்ன பண்ணப் போறாரோ? சிஎஸ்கே அணியின் பெரிய வீக்னஸ் இதுதான்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் எட்டு அணிகளில் பல பலவீனங்களை கொண்ட அணியாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மூத்த அனுபவ வீரர்களை இழந்துள்ளது ஒருபுறம் என்றால் அணியில் மிகச் சில இளம் வீரர்களே உள்ளனர்.

 கடவுள் நீண்ட ஆயுளை வழங்கட்டும்.. பிரதமர் மோடி பிறந்ததினத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து கடவுள் நீண்ட ஆயுளை வழங்கட்டும்.. பிரதமர் மோடி பிறந்ததினத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து

சஞ்சய் பங்கர் விமர்சனம்

சஞ்சய் பங்கர் விமர்சனம்

கடந்த சீசன்களிலும் சிஎஸ்கே அணி மீது இதே போன்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் சிஎஸ்கே அணி மீது விமர்சனம் வைத்துள்ளார்.

முதல் போட்டி

முதல் போட்டி

சிஎஸ்கே அணி செப்டம்பர் 19 அன்று தன் முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி யாரி, யாரை களமிறக்க உள்ளது, கேப்டன் தோனி என்ன திட்டம் வைத்துள்ளார் என ரசிகர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே சிக்கல்கள்

சிஎஸ்கே சிக்கல்கள்

சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் இடம் பெறவில்லை. அவருக்கு இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கவில்லை. அனுபவ வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

சஞ்சய் பங்கர் கேள்வி

சஞ்சய் பங்கர் கேள்வி

இந்த நிலையில், அதிக வயதான வீரர்களை வைத்துள்ள சிஎஸ்கே அணி களத்தில் என்ன செய்யப் போகிறது? அந்த வயதான வீரர்களை தோனி எப்படி பீல்டிங் நிறுத்தப் போகிறார்? என கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்.

அனுபவ வீரர்கள்

அனுபவ வீரர்கள்

அவர் கூறுகையில், தோனி ஒரு கேப்டனாக அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் நிறைய அனுபவ வீரர்களும் உள்ளனர். ஆனால், களத்தில் அந்த அனுபவ வீரர்களை தோனி எப்படி கையாளப் போகிறார் என பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார் பங்கர்.

பீல்டிங் சவால்

பீல்டிங் சவால்

அவர் வயதான வீரர்களிடம் பேட்டிங், பவுலிங்கில் எந்த சவாலையும் எதிர்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன், ஆனால், டி20 போட்டிகளில் மிகவும் சவாலானது பீல்டிங் மற்றும் வேகமான செயல்பாடுகள் தான். பீல்டிங்கில் மூத்த வீரர்களை அவர் எப்படி கையாள்வார்? அது தான் கேப்டனாக அவருக்கு சவாலான விஷயம் என்றார் சஞ்சய் பங்கர்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

சிஎஸ்கே அணியில் மூத்த வீரர்கள் அதிகம் என்றாலும் இந்த ஆண்டு சாம் கர்ரன் போன்ற ஒரீரு இளம் வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பார்கள் என கருதப்படுகிறது. மேலும், உலகிலேயே சிறந்த பீல்டர்களில் ஒருவரான ஜடேஜாவும் இருக்கிறார்.

விமர்சனம்

விமர்சனம்

எனினும், வயதான வீரர்களை குறி வைத்தே சிஎஸ்கே அணி மீது தொடர்ந்து விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. கேப்டன் தோனி பீல்டிங் நிறுத்துவதிலும் சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணி இந்த விமர்சனத்துக்கு பதிலடி அளிக்குமா?

Story first published: Thursday, September 17, 2020, 18:09 [IST]
Other articles published on Sep 17, 2020
English summary
Chennai Super KIngs (CSK) Latest News Updates in Tamil : How Dhoni going to manage old players asks former India batting coach Sanjay Bangar. He says fielding will be challenging with old players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X