For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு அது பிடிச்சிருக்கு... ஸ்டைரிஸ் இப்படி சொல்ல... மஞ்ச்ரேகர் வேறமாதிரி சொல்றாரு!

வெலிங்டன்: நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் ரொம்பப் பிடிக்குமாம்.

Recommended Video

Scott Styris, Manjrekar Discuss about CSK And MI

இந்திய பிரீமியர் லீக் அணிகளிலேயே மிகவும் ஸ்திரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான் என்று அவர் பாராட்டியுள்ளார். இதனால்தான் நான்கு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை விட சென்னை அதிகமாக தன்னை கவருவதாக அவர் கூறுகிறார்.

அவர் சொல்வதும் உண்மைதான். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் அனைத்து நாக் அவுட் சுற்றுக்கும் தகுதி பெற்ற ஒரே அணியாக திகழ்கிறது. அதேபோல 3 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

கொரோனாவின் அதிரடி பௌலிங்கில் அடுத்த முக்கிய விக்கெட்டும் அவுட்கொரோனாவின் அதிரடி பௌலிங்கில் அடுத்த முக்கிய விக்கெட்டும் அவுட்

ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து

ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து

நியூசிலாந்து முன்னாள் விரர் ஸ்காட் ஸ்டைரிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல தரமான வீரர்களை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து ஸ்திரமாக ஆடி வருகிறது. மும்பையை விட ஒரு கோப்பை குறைவாக இருந்தாலும் கூட நிறைவான ஆட்டத்தைக் கொடுத்துள்ளது. இவர்களிடம் உள்ள ஸ்திரத்தன்மையைப் போல வேறு எந்த அணியிலும் நான் கண்டதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

போகாத இடமே கிடையாதுப்பு!

போகாத இடமே கிடையாதுப்பு!

அவர்கள் போகாத இறுதிப் போட்டியே கிடையாது. அதிக அளவிலான நாக் அவுட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 3 முறை சாம்பியனாகியுள்ளனர். இதுதான் ஒரு அணி ஸ்திரமாக இருக்கிறது என்பதற்கான முக்கிய காரணி. மிகச் சிறந்த வீரர்களை இந்த அணி உருவாக்கியுள்ளது. அனைத்து வளரும் வீரர்களுக்கும் இது பெரிய உத்வேகமாக அமையும். சிறந்த பினிஷரான தோனி இந்த அணியில் இருக்கிறார். தோனியா, மலிங்காவா என்ற போட்டி வரும்போது தோனிதான் உயர்ந்து நிற்கிறார் என்றார் ஸ்டைரிஸ்

வந்துட்டாரு மஞ்ச்ரேகர்

வந்துட்டாரு மஞ்ச்ரேகர்

ஆனால் ஸ்டைரிஸ் சொல்வதை ஏற்க முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணிக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ். கடந்த 12 வருடமாக இந்தத் தொடர் நடந்து வருகிறது. இதில் வெற்றி சதவீதத்தைப் பாருங்கள். அதில் ஆரம்பத்தில் சென்னைதான் முதலில் இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக அதற்கு மும்பை இந்தியன்ஸ் நல்ல சவாலைக் கொடுத்து வருகிறது. நல்ல உயர்வையும் கண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நல்லா சவால் விடுதே

நல்லா சவால் விடுதே

வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் கோப்பைகளை வெல்லுவதிலும் மும்பை இந்தியன்ஸ் சாதனை படைத்துள்ளது. சென்னைக்கு 3 கோப்பைகள்தான் கிடைத்துள்ளன. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி 4 கோப்பைகளை வென்றுள்ளது. அதை மறுக்க முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சரியான சவாலாக மும்பை இந்தியன்ஸ் உருவெடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸும், சென்னையும் இறுதிப் போட்டிக்கு வந்தால் கோப்பையை வெல்லும் உறுதி சென்னையை விட மும்பையிடம்தான் வலுவாக உள்ளது என்றார் மஞ்ச்ரேகர்.

Story first published: Tuesday, April 7, 2020, 11:52 [IST]
Other articles published on Apr 7, 2020
English summary
According to Former NZ player Scott Styris, CSK is the best team over MI in various categories
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X