For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசானாலும்… திறமையும், வேகமும் மாறவே இல்லை.. தல தோனியை பாராட்டும் அந்த வீரர்

சென்னை: இந்த வயதிலும் தோனி இந்தளவு வேகமாகவும், துடிப்புடனும் செயல்படுவது ஆச்சரியமாக இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஜெகதீசன் கூறியுள்ளார்.

2008ம் ஆண்டுமுதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர் பிரபலமான ஒன்று. 11 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், 12வது தொடரை பெரும் குழப்பத்தை தொடர்ந்து இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

ஆனால்.... மே 30ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்க உள்ளதால், அதற்கு முன்னதாக ஐபிஎல்லை நடத்தும் நிலை உருவானது. அதனால், வழக்கமான ஏப்ரல் முதல் வாரத்துக்கு பதிலாக, மார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்குகிறது.

ஏன்பா.. ஆள் இருக்கும் போது நீ ஏன் ரன் ஓடுற? மறந்து போய் ரன் ஓடிய ஆஸி. வீரர்! ஏன்பா.. ஆள் இருக்கும் போது நீ ஏன் ரன் ஓடுற? மறந்து போய் ரன் ஓடிய ஆஸி. வீரர்!

அட்டவணை வெளியீடு

அட்டவணை வெளியீடு

வரும் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டு இருக்கிறது. எஞ்சிய போட்டி அட்டவணை சில தினங்களில் வெளியாகும்.

23ல் முதல் போட்டி

23ல் முதல் போட்டி

இப்போது உள்ள அறிவிப்பின்படி... சென்னையில் 2 போட்டிகள் நடக்கின்றன. அதில் வரும் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 16ல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 31ம் தேதி, சென்னை, ராஜஸ்தானை சந்திக்கிறது.

ரசிகர்கள் தயார்

ரசிகர்கள் தயார்

சென்னை அணி தான் இம்முறையும் கோப்பையை தட்டிச் செல்லும் என்று ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களின் கொண்டாட்டங்களுக்கு மெருகேற்றுவது போல சென்னை அணி வீரர் ஜெகதீசன் தோனியை புகழ்ந்து தள்ளி உள்ளார்.

முழு உடல்தகுதி

முழு உடல்தகுதி

அவர் கூறியிருப்பதாவது:தோனி இந்த வயதிலும் இப்படி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. அவர் விளையாடுவதை பார்த்தால் 37 வயது என்று கூற முடியாது.

பேசுவது குறைவு

பேசுவது குறைவு

மைதானத்தில் அவர் பேசுவதே மிகவும் குறைவு. ஆனால் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தமான அர்த்தம் இருக்கும். அதுதான் போட்டியின் முடிவையே மாற்றும்.

கற்றுக் கொண்டேன்

கற்றுக் கொண்டேன்

அவரிடம் இருந்து விளையாட்டை பற்றிய தொழில் நுணுக்கத்தை மட்டும் நான் கற்றுக் கொள்ளவில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுவது என்பதையும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

Story first published: Wednesday, March 13, 2019, 18:12 [IST]
Other articles published on Mar 13, 2019
English summary
Tamil Nadu and Chennai Super Kings wicket-keeper-batsman N Jagadeesan is in awe of Mahendra Singh Dhoni's fitness and said the legendary stumper was supremely fit and so calm.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X