சிஎஸ்கேவோட 4வது போட்டி... தோனி எப்படி ஆடுவாரு... உற்சாகத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

மும்பை : இன்றைய ஐபிஎல் 2021 தொடரின் 15வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதவுள்ளன.

'Dhoni, Pitch மற்றும் Match-ஐ கணிப்பதில் கில்லாடி'-Sunil Gavaskar, Scott Styris | Oneindia Tamil

இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் சிஎஸ்கே 2ல் தொடர் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

ஆளையே காணும்.. அவருக்கு என்னதான் ஆனது? கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐபிஎல் வீரர்.. ரசிகர்கள் குழப்பம்

கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய தோனி 18 ரன்களை எடுத்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் அவரது அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்றைய 15வது போட்டி

இன்றைய 15வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 15வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதவுள்ளன. இன்றைய தினம் சென்னை, மும்பை என இரு இடங்களில் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் சிஎஸ்கே தொடரின் தனது 4வது போட்டியில் இன்றைய தினம் மோதவுள்ளது.

ஐபிஎல்லில் 200 போட்டி

ஐபிஎல்லில் 200 போட்டி

இன்றைய போட்டியின் மூலம் கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் தனது 200வது போட்டியை விளையாடவுள்ளார். இதுவரை எம்எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா மட்டுமே இந்த எண்ணிக்கையை அடைந்துள்ள நிலையில் 3வது வீரராக இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் இதை பூர்த்தி செய்கிறார்.

காத்திருக்கும் தோனி

காத்திருக்கும் தோனி

இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி இதுவரை 39 ஸ்டம்பிங்குகள் மற்றும் 109 கேட்ச்களை பிடித்து 148 விக்கெட்டுகளை அவுட் செய்துள்ள நிலையில், அவர் 150 அவுட் கணக்கை எட்ட இன்னும் 2 அவுட்களே தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் அவர் அந்த சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

ரெய்னா காத்திருப்பு

ரெய்னா காத்திருப்பு

இதனிடையே சிஎஸ்கே சின்ன தல சுரேஷ் ரெய்னா தனது 200வது சிக்ஸை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரு சிக்ஸே தேவைப்படுகிறது. அந்த சாதனையை அவர் இன்றைய போட்டியில் நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சாதனைகளுக்கு காத்திருக்கும் வீரர்கள்

சாதனைகளுக்கு காத்திருக்கும் வீரர்கள்

இதனிடையே ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய ஷர்துல் தாக்கூருக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் பாப் டூ பிளசிஸ் மொத்தமாக டி20 வடிவத்தில் 6,000 ரன்களை பூர்த்தி செய்ய 1 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த இரு சாதனைகளும் இன்றைய போட்டியில் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni needs two dismissals for completing 150 dismissals in the IPL
Story first published: Wednesday, April 21, 2021, 13:16 [IST]
Other articles published on Apr 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X