For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லில் 26.8 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த அணி எது தெரியுமா... தெரிஞ்சுக்கலாம் வாங்க

டெல்லி : ஐபிஎல் தொடரில் ரசிகர்களை கவர்ந்த அணி குறித்த ஆய்வை ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஐபிஎல்லின் மொத்த ரசிகர்களில் 75 சதவிகிதத்தினரை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பெற்றுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 25 சதவிகித ரசிகர்கள் வட்டத்தையே மற்ற 5 அணிகள் பெற்றுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி

எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி

கடந்த 13 ஐபிஎல் சீசன்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த அணி எது என்பது ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 23 மாநிலங்களில் 3,200 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஐபிஎல்லின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

26.8 மில்லியன் ரசிகர்கள்

26.8 மில்லியன் ரசிகர்கள்

இந்த ஆய்வில் 26.8 மில்லியன் ரசிகர்களை பெற்று சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் குறைந்த வித்தியாசத்தில் அதாவது 24.8 மில்லியன் ரசிகர்களுடன் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. மூன்றாவது இடத்தில் 13.3 மில்லியன் ரசிகர்களுடன் ஆர்சிபி உள்ளது.

75% ஐபிஎல் ரசிகர்கள்

75% ஐபிஎல் ரசிகர்கள்

இந்த மூன்று அணிகளும் சேர்ந்து 75 சதவிகித ஐபிஎல் ரசிகர்களை பெற்றுள்ளது. மற்ற 5 அணிகள் இணைந்து மீதமுள்ள 25 சதவிகித ரசிகர்களை பெற்றுள்ளது. மேலும் ஐபிஎல்லில் 64 சதவிகித ஆண்களும் 36 சதவிகித பெண்களும் ரசிகர்களாக உள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே, ஆர்சிபி டாப்

சிஎஸ்கே, ஆர்சிபி டாப்

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தோனி மற்றும் விராட் கோலிக்கு அதிகமான பெண் ரசிகைகள் உள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆண் ரசிகர்களை மட்டுமே வைத்து பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் சிஎஸ்கே முந்தி காணப்படுகிறது. ஆனால் பெண் ரசிகைகளால் சிஎஸ்கே அதிக ரசிகர்களை பெற்று முதலிடங்ததில் உள்ளது.

மற்ற அணிகள் பாடம் கற்க வேண்டும்

மற்ற அணிகள் பாடம் கற்க வேண்டும்

இதனிடையே, ஆர்மேக்ஸ் மீடியாவின் நிறுவனர் மற்றும் சிஇஓ சைலேஷ் கபூர் கூறுகையில், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி மூன்று அணிகளும் கடந்த 13 ஆண்டுகளில் தங்களது ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்து வந்துள்ளதாகவும், இவர்களை பார்த்து தங்களது ரசிகர்கள் வட்டத்தை உயர்த்திக் கொள்ள மற்ற அணிகள் திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Wednesday, November 25, 2020, 19:07 [IST]
Other articles published on Nov 25, 2020
English summary
It's for the other franchises to learn from the success story of CSK and MI and develop a strategy -Ormax Media Founder
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X