For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விழுந்தே கிடக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்றும் யானை கிடையாது.. குதித்து வரும் குதிரை!

By Veera Kumar

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்கு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு நீதிபதி லோதா கமிட்டி 2 வருட தடை விதித்துள்ள நிலையில், மற்ற அணிகளின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா. குறி்ப்பாக, சென்னை அணிதான் அனைத்து தொடர்களிலும் சிறப்பாக ஆடி பைனலுக்கு செல்லும் அணி. எனவே மற்ற அணிகளுக்கு உள்ளூர சந்தோஷம் இருக்கத்தானே செய்யும்.

அடுத்த அணிகள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய ஒரு கற்பனை பதிவு.

பெங்களூர்

பெங்களூர்

என்னதான் கெய்ல், டிவில்லியர்ஸ், கோஹ்லி இருந்தாலும், மல்லய்யா அணி, பைனலுக்கு செல்ல எப்போதும் மல்லுக்கட்டுகிறது. குறிப்பாக சென்னையிடம் அதன் அதிரடி என்றும் எடுபட்டதில்லை. இப்போ கோஹ்லிக்கு கொண்டாட்டம்தான்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓனர் நம்மூர்க்காரர் என்பதால், இப்போது அந்த அணியின் மைன்ட் வாய்ஸ், இனிமே சென்னை டீம் சப்போர்ட் நமக்குத்தான் என்பதாகவே இருக்கும்.

ஷாரூக்கான்

ஷாரூக்கான்

ஓட்டை, உடைசல் பவுலிங்கை வைத்துக்கொண்டு வருடம்தோறும், பைனல் செல்லும் சிஎஸ்கே வெற்றியின் பின்னணியில் டோணி இருப்பது கண்கூடு. எனவே, கொல்கத்தா ஓனர் ஷாருக்கானின் அடுத்த லட்சியம் டோணியை வளைப்பதாகத்தான் இருக்கும்.

பஞ்சராகும் பஞ்சாப்

பஞ்சராகும் பஞ்சாப்

பஞ்சாப் அணி அவ்வப்போது பஞ்சராவது சென்னையிடம்தான். இனிமேல், நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே, பஞ்சாப் முதுகெலும்பான மேக்ஸ்வெல் எண்ணமாக இருக்க முடியும்.

டர்ர் டெல்லி

டர்ர் டெல்லி

டெல்லி எப்போதுமே டர்ர்ர்.. ரகம்தான். எல்லா டீமையும் தடை பண்ணுதான் அவர்களுக்கு கப் கிடைக்கும் என்று அந்த அணி வீரர்களே உறுதியாக நம்புவார்கள். அந்த அளவுக்கு அங்கு எல்லாமே வீக்.

மும்பைக்கு முக்காபலா

மும்பைக்கு முக்காபலா

மும்பை இந்த சீசனில் கோப்பையை வென்றிருக்கலாம். ஆனால் எல்லா சீசனிலும் சென்னை அணிதான் அதற்கு கண்டம். இப்போது அப்பாடா... என பெருமூச்சு விடும், பாண்டிங் குரூப்.

இப்படியும் சந்தோஷம்

இப்படியும் சந்தோஷம்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பிளேயர்கள் பிடிபட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்துதான். அதனால், எங்கே நம்மை மட்டும்தான் தடை செய்வார்களோ என்று நினைத்திருந்த ராஜஸ்தான் அணிக்கு, இப்போ துணைக்கு சென்னை வருவதில் ஏக குஷி.

குதித்து வரும் குதிரை

குதித்து வரும் குதிரை

ஆனா, எந்த டீமும் எப்படியும் நினைத்துவிட்டு போகலாம். வீழ்ந்து விடக்கூடியதா சென்னை. நெவர். யானை போல வீழ்ந்து கிடக்காமல், குதிரை போல குதித்து வரும். நம்புங்கள். நம்பிக்கைதானே எல்லாம். தட்ஸ்தமிழ் உருவாக்கிய இந்த பேஸ்புக் மீம்ஸ் போட்டோ, வெளியான 12 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேரை ரீச் ஆகி 6 ஆயிரம் ஷேர்களை கடந்துள்ளது.

Story first published: Wednesday, July 15, 2015, 12:52 [IST]
Other articles published on Jul 15, 2015
English summary
CSK might be banned for two years after the match fixing controversy but fans expects it will bounce back from the hurdles.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X