For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 போட்டிகள்லயும் சிறப்பாக கைகொடுத்த சிஎஸ்கே ஆல்-ரவுண்டர்... ரூ.7 கோடிக்கு வொர்த் தான்!

மும்பை : சிஎஸ்கே -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Recommended Video

Moeen ali-க்கு நன்றி சொன்ன Dhoni | IPL 2021 | Oneindia Tamil

இந்த போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் சிஎஸ்கே பேட்டிங் செய்தது.

சிஎஸ்கே இந்த தொடரில் சிறப்பான துவக்கத்தை அளிக்கவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளது.

டாசின்போது ராஜஸ்தான் கேப்டன் செய்த செயல்... ஷாக்கான அம்பயர்... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?டாசின்போது ராஜஸ்தான் கேப்டன் செய்த செயல்... ஷாக்கான அம்பயர்... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

சிஎஸ்கே 3வது போட்டி

சிஎஸ்கே 3வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் தனது 3வது போட்டியில் சிஎஸ்கே தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை ராஜஸ்தான் அணி தேர்வு செய்த நிலையில், சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது.

ஒரே இலக்கு

ஒரே இலக்கு

இந்நிலையில் தனது இன்னிங்சை சிஎஸ்கே 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களுடன் முடித்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலும் சிஎஸ்கே இதே இலக்கையே எதிரணிக்கு கொடுத்திருந்தது. அந்த போட்டியில் தோல்வியும் அடைந்தது.

26 ரன்களை அடித்த மொயீன் அலி

26 ரன்களை அடித்த மொயீன் அலி

இன்றைய போட்டியில் எந்த வீரரும் சிறப்பான ஆட்டத்தை அளிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தனர். இந்த பிட்சில் 200 ரன்களை அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது கடந்த போட்டிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் எந்த சிஎஸ்கே வீரரும் அரைசதத்தை கடக்கவில்லை.

26 ரன்களை அடித்த மொயீன்

26 ரன்களை அடித்த மொயீன்

ஆயினும் சிஎஸ்கேவிற்காக விளையாடிவரும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி 20 பந்துகளில் 26 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடந்த போட்டிகளிலும் அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்களையும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 46 ரன்களையும் அவர் அடித்திருந்தார்.

மிடில் ஆர்டர் வீரர்

மிடில் ஆர்டர் வீரர்

கடந்த போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கேவின் சிறப்பான வீரராக அவர் மாறி வருகிறார். இந்த சீசனில் ஸ்பின் அட்டாக் மற்றும் மிடில் ஆர்டரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.

தோனி விளக்கம்

தோனி விளக்கம்

இந்நிலையில் அவர் அணியின் 3வது வீரராக களமிறக்கப்பட்டு வருகிறார். அவரை அந்த இடத்தில் இறக்கினால் மற்றவர்களையும் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று தோனி கடந்த போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

சிஎஸ்கே வீரராக உற்சாகம்

சிஎஸ்கே வீரராக உற்சாகம்

கடந்த சீசனில் ஆர்சிபிக்காக விளையாடிய மொயீன் அலி, 3 போட்டிகளில் விளையாடி 12 ரன்களையும் ஒரு விக்கெட்டையும் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்திருந்தார். இதையடுத்து தற்போது சிஎஸ்கேவிற்காக விளையாடிவரும் அவர், உற்சாகத்துடன் விளையாடி வருகிறார். இதற்கு தோனிக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

Story first published: Monday, April 19, 2021, 22:25 [IST]
Other articles published on Apr 19, 2021
English summary
Moeen ali is being enjoying his game and thanked his Captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X