For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோப்பையை விட மாட்டோம்... சிஎஸ்கே சபதம்... புதுசா ஆப்கானிஸ்தான் பௌலர்கள் இணைஞ்சிருக்காங்க!

மும்பை : ஐபிஎல் தொடர் வரும் மாதம் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது.

இதற்கென சிறப்பாக தயாராகி வருகிறது சிஎஸ்கே அணி. கடந்த ஆண்டில் விட்டதை இந்த ஆண்டு கோப்பையுடன் பிடிக்க தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் பௌலர்கள் நெட் வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

10 தினங்களில் துவக்கம்

10 தினங்களில் துவக்கம்

ஐபிஎல் 2021 தொடருக்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், 8 ஐபிஎல் அணிகளும் சிறப்பாக தங்களை தயார் படுத்தி வருகின்றன. இப்போதே ஐபிஎல் அலை துவங்க ஆரம்பித்துள்ளது. ரசிகர்களும் வீரர்களும் கொரோனா அலையையும் தாக்குபிடித்து ஐபிஎல் அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

முன்னதாக பயிற்சி அறிவிப்பு

முன்னதாக பயிற்சி அறிவிப்பு

இந்நிலையில் சிஎஸ்கே கடந்த சீசனில் விட்டதை தற்போது கோப்பையுடன் பிடிக்கும் வகையில் ஐபிஎல் தொடர் அறிவிப்புக்கு முன்னதாக தங்களது பயிற்சி போட்டிகளை அறிவித்து வீரர்களை சிறப்பாக தயார் செய்து வருகிறது. கடந்த மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாம்களில் தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

இந்நிலையில் ஹோம் அட்வான்டேஜ் இல்லாத நிலையில் தற்போது முகாம் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முகாமிலும் தல தோனி தலைமையில் வீரர்கள் பயிற்சி பெற்று வருகினற்னர். ரெய்னா, புஜாரா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். அவர்களின் பயிற்சிகளை அவ்வப்போது சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறது. வீடியோக்களும் புகைப்படங்களும் தூள் கிளப்புகின்றன.

நெட் பௌலர்களாக இணைப்பு

நெட் பௌலர்களாக இணைப்பு

கடந்த சென்னையில் பயிற்சி முகாமில் இலங்கை வீரர்கள் இணைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன- இந்நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தான் வீரர்கள் நூர் அகமது, பசல்ஹக் பரூகி ஆகியோர் நெட் பௌலர்களபக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இடதுகை லெக் ஸ்பின்னர்

இடதுகை லெக் ஸ்பின்னர்

16 வயதேயான நூர் அகமது இடதுகை லெக் ஸ்பின்னர். பிபிஎல் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று இவர் கவனம் பெற்றுள்ளார். இதேபோல 20 வயதான பரூகி ஆப்கானிஸ்தானுக்காக ஜிம்பாப்வேக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்று முடிந்துள்ள டி20 தொடரில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

Story first published: Monday, March 29, 2021, 19:05 [IST]
Other articles published on Mar 29, 2021
English summary
CSK recruited Afghanistan duo as a net bowlers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X