For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த சீசன்ல இந்த 7 பேர் தான் ரொம்ப டேஞ்சர்... இவங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கணும்... பாண்டிங் கருத்து

மும்பை : டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோச் ரிக்கி பாண்டிங் மற்ற அணிகளை சேர்ந்த எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய வீரர் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் 6 வீரர்கள் குறித்து ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

7 எதிரணிகள்.. முக்கிய வீரர்கள்

7 எதிரணிகள்.. முக்கிய வீரர்கள்

ஐபிஎல் 2021 சீசனில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி நாளைய தினம் மும்பையில் சிஎஸ்கேவை எதிர்கொளள்வுள்ளது. அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ரிக்கி பாண்டிங், இந்த சீசனில் 7 எதிரணிகளின் முக்கியமான மற்றும் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய வீரர் குறித்து பேசியுள்ளார்,

சிஎஸ்கேவில் ரெய்னா

சிஎஸ்கேவில் ரெய்னா

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலிய வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக இந்த சீசனில் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்துள்ள சுரேஷ் ரெய்னா குறித்தும் பாண்டிங் கூறியுள்ளார். அனுபவம், பிட்னஸ் மற்றும் திறமையை அதிகமாக கொண்டுள்ள சுரேஷ் ரெய்னா அதிகமான ரன்களை ஐபிஎல் சீசன்களில் குவித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரில் மிகவும் முக்கியமான பங்கு வகித்து அணியை வலிமையாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

சிறப்பான வருண் சக்ரவர்த்தி

சிறப்பான வருண் சக்ரவர்த்தி

அடுத்ததாக கேகேஆர் அணியின் வருண் சக்ரவர்த்தி கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டதை பாண்டிங் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் தன்னுடைய ஸ்பின்களில் அதிகமான வித்தியாசத்தை காண்பிப்பதாகவும் அதிக வேகத்தை தன்னுடைய பௌலிங்கில் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அணியின் சொத்து பாண்டியா

அணியின் சொத்து பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா இந்த சீசனல் அதிக எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய வீரர் என்று பாண்டிங் கூறியுள்ளார். அவர் அந்த அணியின் மிகபெரிய சொத்து என்றும் தெரிவித்துள்ளார். அவர் சிறப்பான ஆல்-ரவுண்டர் பேக்கேஜ் என்றும் பாராட்டு தெரிவித்தளள்ர்

அதிரடி பூரன்

அதிரடி பூரன்

இதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிகோலஸ் பூரன் தன்னுடைய பேட்டிங்கின் மூலம் அதிரடிகளை செய்து வருவதாகவும் பாண்டிங் கூறியுள்ளார். இந்த சீசனில் முதல் நான்கு இடங்களில் பூரன் விளையாடினால், இந்த தொடரில் அதிகமான ரன்களை அவர் குவித்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பேட்டிங் கிங் திவேட்டியா

பேட்டிங் கிங் திவேட்டியா

இதேபோல ராஜஸ்தான் ராயல்சின் ராகுல் திவேட்டியா அந்த அணியின் பேட்டிங் கிங் என்று தெரிவித்துள்ளார் பாண்டிங். கடந்த சில ஆண்டுகளாக அவர் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருவதாகவும் சிறப்பான பவர்ஹிட்டராக மாறி வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான படிக்கல்

சிறப்பான படிக்கல்

ஆர்சிபியில் விராட் கோலி, டீ வில்லியர்ஸ் மற்றும் க்ளென் மாக்ஸ்வெல் போன்ற சிறப்பான வீரர்கள் இருந்தாலும் இந்த சீசனில் அனைவரையும் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் தேவ்தத் படிக்கல் கவருவார் என்று பாண்டிங் தெரிவித்தள்ளார். விட்த் கொடுத்தால் ஆப் சைடிலும் வலிமையாக விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடராஜனின் யார்க்கர் குறித்து பாராட்டு

நடராஜனின் யார்க்கர் குறித்து பாராட்டு

இதனிடையே சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தங்கராஜ நடராஜனின் யார்க்கர் பௌலிங் குறித்து பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரை பவர்ப்ளேவில் ஒரு ஓவர், மிடிலில் ஒரு ஓவர் மற்றும் டெத்தில் 2 ஓவர்களை வீச செய்து அணி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று பாண்டிங் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Story first published: Friday, April 9, 2021, 19:03 [IST]
Other articles published on Apr 9, 2021
English summary
Most dangerous players in opposite teams -Ricky Ponting reveals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X