For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிம்லாவில் ஜாலி டூர் அடிக்கும் தோனி.. சூப்பர் போஸ் கொடுத்த மனைவி மற்றும் மகள் வைரலாகும் புகைப்படம்!

சிம்லா: சிஎஸ்கே கேப்டன் தோனி, சிம்லாவில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் நேரம் செலவிட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மும்பை, ஐதராபாத் அணிகள் தப்பித்தது.. வீரர்களின் பங்கேற்பு உறுதிஐபிஎல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மும்பை, ஐதராபாத் அணிகள் தப்பித்தது.. வீரர்களின் பங்கேற்பு உறுதி

கடந்த மே.4ம் தேதியுடன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் அனைத்து அணி வீரர்களும் அடுத்த தொடர்களுக்காக சென்றுவிட்டனர்.

அப்டேட்ஸ்

அப்டேட்ஸ்

இந்திய வீரர்கள் இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களுக்காக சென்றுவிட்டாலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என ரசிகர்கள் குழம்பி வந்தனர். அவரின் மனைவி சாக்‌ஷி தோனி போடும் இன்ஸ்டா பதிவுகளை பார்த்து அவ்வபோது தோனி வீட்டிலேயே தான் செல்லப்பிராணிகளுடன் பொழுதை கழித்து வருகிறார் என தெரிந்துக்கொண்டனர்.

சுற்றுலா

சுற்றுலா

இந்நிலையில் கேப்டன் தோனி ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் ஜாலி டூர் சென்றுள்ளார். சிம்லாவுக்கு தற்போது வருகை தருவதற்கு கோவிட் பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியை சிம்லாவில் கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

தோனி, சிம்லாவில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதனை சாக்‌ஷி தோனி மற்றும் ஜீவா தோனி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். குளிர் பிரதேசத்தில் தோனி தனது மகளுடன் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்டுள்ள அழகான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2ம் பகுதி

ஐபிஎல் 2ம் பகுதி

நடப்பு ஐபிஎல் சீசனில் தோனியின் பழைய அதிரடியை ரசிகர்கள் மிஸ் செய்தனர். ஆனால் அவரின் சிறப்பான கேப்டன்சியால் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. வரும் செப்டம்பரில் தொடங்கவிருக்கும் ஐபிஎல்-ன் 2ம் பகுதியில் தோனியின் பழைய ஃபார்மை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, June 25, 2021, 19:54 [IST]
Other articles published on Jun 25, 2021
English summary
CSK Skipper MS Dhoni enjoying his vacation in Shimla, along with wife and daughter, pics goes Viral on internet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X