For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிர்பார்க்காத அறிவிப்பு.. 'அந்த' இரண்டு வீரர்கள்.. மிஸ்ஸிங் - புது சிக்கலில் 'சிஎஸ்கே'

சென்னை: ஒருவேளை பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் தொடங்கினால், சிஎஸ்கே தனது மிக முக்கியமான வீரர் ஒருவரை இழக்க நேரிடும்.

இந்தியாவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடரை பாதியில் நிறுத்தியது பிசிசிஐ. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈந்த சீசனில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த போது, ஐபிஎல் நிறுத்தப்பட்டது சிஎஸ்கே ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்தது.

தொடர்ந்து 3 முறை இந்திய வீரர்கள் பெற்ற விருது ஒருவழியா அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுத்துருக்காங்கதொடர்ந்து 3 முறை இந்திய வீரர்கள் பெற்ற விருது ஒருவழியா அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுத்துருக்காங்க

அதேசமயம், இந்தாண்டு இறுதியில், அதாவது டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

நாங்க வரமாட்டோம்

நாங்க வரமாட்டோம்

இந்த நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்தினாலும் அதில் இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச போட்டி காரணமாக பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தெரிவித்தது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆஷ்லே ஜைல்ஸ், "அடுத்தடுத்த போட்டி அட்டவணைப்படி எங்களுக்கு நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அவற்றில் இங்கிலாந்து வீரர்களை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.

அதுவே டார்கெட்

அதுவே டார்கெட்

ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது, எங்கு நடத்தப்படும் என்பது இப்போது வரைக்கும் யாருக்கும் தெரியாது. அதேநேரம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து எங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. இதில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முக்கியமானது. இந்த போட்டிகளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

களையிழக்கும் ஐபிஎல்

களையிழக்கும் ஐபிஎல்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்), சாம் கர்ரன், மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்), கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் (டெல்லி கேபிடல்ஸ்), இயான் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் (ஐதராபாத் சன் ரைசர்ஸ்) ஆகிய 14 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போகலாம்.

முக்கிய தூண்கள்

முக்கிய தூண்கள்

இந்த முடிவால், பெரிதாக பாதிக்கப்படும் அணி என்றால், ராஜஸ்தான் ராயல்சும், சென்னை சூப்பர் கிங்ஸும் தான். ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே ஸ்டோக்ஸ் காயம் காரணமாக வெளியேறிவிட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடங்கப்பட்டால் ஜோஸ் பட்லர், ஆர்ச்சர் விளையாட முடியாது. இவர்கள் இருவரும் அந்த அணியின் பேட்டிங், பவுலிங்கின் தூண்கள்.

சோகத்திலும் சோகம்

சோகத்திலும் சோகம்

இதே கதை தான் சிஎஸ்கேவுக்கும். நடப்பு தொடரில் சுரேஷ் ரெய்னாவின் ஒன் டவுன் ஸ்பாட்டில் இறங்கி, பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டும், ஸ்பின் டிராக் பிட்ச்களில், விக்கெட்டுகளை அறுவடை செய்தும் தோனிக்கு பக்கபலமாக இருந்த மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் இழக்க நேரிடும். அதைவிட முடிக்கியமாக, ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராகவும், தோனியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்த சாம் கரணை சிஎஸ்கே இழப்பது தான் பெரும் சரிவு. ஒருவேளை, மீண்டும் ஐபிஎல் தொடங்கப்பட்டால், நிச்சயம் இவ்விரு வீரர்களின் மிஸ்ஸிங், அணியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தோனி படை அதையும் மீறி மீண்டும் தன் பலத்தை நிரூபிக்குமா?

Story first published: Thursday, May 13, 2021, 17:35 [IST]
Other articles published on May 13, 2021
English summary
csk to miss sam curran and moeen ali ipl 2021 - ஐபிஎல் 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X