1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி

ஹைதராபாத்: ஹைதராபாத் அணியின் மூத்த வீரர் கேன் வில்லியம்சனை சிஎஸ்கேவிற்குள் இழுக்க கடுமையான முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2021 தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வரும் மே மாதம்தான் ஐபிஎல் தொடர் நடக்கும் என்றாலும் பிப்ரவரி 11ம் தேதி இதற்கான மினி ஏலம் நடக்க உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஐபிஎல் அணிகள் தாங்கள் விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணியின் மூத்த வீரர் கேன் வில்லியம்சனை சிஎஸ்கேவிற்குள் இழுக்க கடுமையான முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முயற்சிகள் எதற்கும் ஹைதராபாத் அணி மசியவில்லை. கேன் வில்லியம்சனை கொடுக்கவே முடியாத என்பதில் ஹைதராபாத் அணி உறுதியாக இருந்தது.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

2021 ஐபிஎல் தொடருக்கு முன் இவரை டிரான்ஸ்பர் அடிப்படையில் சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர அணி நிர்வாகம் முயன்றது. அணியின் பயிற்சியாளர் பிளமிங் தொடங்கி அணியின் கேப்டன் தோனி வரை எப்படியாவது வில்லியம்சனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தனர்.

வில்லியம்சன்

வில்லியம்சன்

ஆனால் ஹைதராபாத் அணியும் சரி, அணியின் கேப்டன் டேவிட் வார்னரும் சரி கேன் வில்லியம்சனை அணியில் இருந்து வெளியேற்றும் எண்ணத்தில் இல்லை. இதற்காக சில தூதுக்கள் அனுப்பப்பட்ட பின்பும் கூட கேன் வில்லியம்சனை தக்க வைக்கவே ஹைதராபாத் அணி ஆர்வம் தெரிவித்தது.

மோசம்

மோசம்

இதனால் கடைசியில் சிஎஸ்கே அணி வில்லியம்சனுக்கு வலைவீசும் திட்டத்தை தாற்காலிகமா கைவிட்டது. இவரை 2022 ஐபிஎல்லில் நடக்கும் பெரிய ஏலத்தில் கைப்பற்றலாம் என்று சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. வருங்கால கேப்டனாக இவரை கொண்டு வரும் எண்ணத்தில் வில்லியம்சனுக்கு சிஎஸ்கே வலைவிரிக்க உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
CSK tried get Kane Williamson in the transfer window from SRH team but failed ahead of IPL 2021 mini auction.
Story first published: Thursday, January 21, 2021, 13:51 [IST]
Other articles published on Jan 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X