For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெய்னா நடந்து கொண்ட விதம்.. அடக்க முடியாத கோபம்.. செமயாக குத்திக் காட்டிய தோனி!

ரெய்னா நடந்து கொண்ட விதம்.. அடக்க முடியாத கோபம்.. செமயாக குத்திக் காட்டிய தோனி!

அபுதாபி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாதியில் தவிக்க விட்டு சென்ற சுரேஷ் ரெய்னாவை செமயாக குத்திக் காட்டி அதிர வைத்துள்ளார் தோனி.

2020 ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி, வலுவான மும்பை இந்தியன் அணியை வீழ்த்தி அசத்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் போடும் போதும், போட்டி முடிந்த பின்னும் இரண்டு முறை சுரேஷ் ரெய்னா பெயரை சொல்லாமல் ஜாடை மாடையாக அவரை விமர்சித்தார் தோனி.

438 நாட்களுக்கு பின் வந்தார்.. முதல்நாளே நினைத்து பார்க்க முடியாத சாதனை.. கேட்டுச்சா.. அதான் தோனி!438 நாட்களுக்கு பின் வந்தார்.. முதல்நாளே நினைத்து பார்க்க முடியாத சாதனை.. கேட்டுச்சா.. அதான் தோனி!

சிஎஸ்கே அணி பிரச்சனை

சிஎஸ்கே அணி பிரச்சனை

2020 ஐபிஎல் தொடரில் வேறு எந்த அணிக்கும் இல்லாத அளவு சிஎஸ்கே அணிக்கு மட்டும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. இரண்டு சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுடன் சிஎஸ்கே வீரர்கள் இருந்த போதும் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரெய்னா விலகல்

ரெய்னா விலகல்

இந்த நிலையில், திடீரென அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவர் ஏன் விலகினார் என்பதற்கு இன்று வரை சரியான விளக்கத்தை யாரும் அளிக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனியுடன் அவர் கருத்து வேறுபாட்டில் தான் விலகியதாக கூறப்பட்டது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

துபாயில் முதல் வாரம் குவாரன்டைனில் இருந்த போது ரெய்னா விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அது பற்றி சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி கேட்டதாகவும், அதற்கு சுரேஷ் ரெய்னா கோபம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தோனி கோபம்?

தோனி கோபம்?

இது கேப்டன் தோனிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் சுரேஷ் ரெய்னா போனாலும் அணியை வழிநடத்தலாம் என ஒரே முடிவாக இருக்க, சிஎஸ்கே நிர்வாகமும், ரெய்னாவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. தோனி, ரெய்னா மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த நிலையில், ரெய்னா இல்லாமலேயே முதல் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராயுடு, பாப் டுபிளெசிஸ் இருவரும் ரெய்னா இல்லாத குறையே தெரியாமல் சிறப்பாக சேஸிங்கில் பேட்டிங் செய்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

தோனி என்ன சொன்னார்?

தோனி என்ன சொன்னார்?

தோனி முதல் போட்டியில் டாஸ் போடும் பொது பேசுகையில், முதல் ஆறு நாட்கள் குவாரன்டைன் கடுமையாக இருந்தது. அந்த நேரத்தில் யாரும் ஏமாற்றமோ, எரிச்சலோ அடையவில்லை என தான் கருதுவதாக கூறினார். இது குவாரன்டைன் விதிமுறைகளை மீறிய ரெய்னாவை குறி வைத்தே சொல்லப்பட்டதாக தெரிகிறது.

குற்றம் சொல்லும் கிரிக்கெட் வீரர்கள்

குற்றம் சொல்லும் கிரிக்கெட் வீரர்கள்

அடுத்து போட்டி முடிந்த பின் பேசுகையில் ஐபிஎல் தொடருக்கு தயார் செய்த ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த தொடர் நடக்க பல நூறு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் இதை எளிதாக குற்றம் சொல்ல முடியும் என்றார்.

ரெய்னாவை தான் சொன்னாரா?

ரெய்னாவை தான் சொன்னாரா?

டாஸ் போடும் போது பேசியது கூட பொதுவான விஷயமாக இருந்தது. ஆனால், போட்டிக்கு பின் பேசியது நேரடியாக சுரேஷ் ரெய்னாவைத் தான் அவர் தாக்கிப் பேசுகிறார் என வெளிப்படையாக தெரிந்தது. ரசிகர்கள் இடையே இது பரபரப்பாக பேசப்பட்டது.

அடக்க முடியாத கோபம்

அடக்க முடியாத கோபம்

தோனிக்கு சுரேஷ் ரெய்னா மீது அடக்க முடியாத கோபம் இருப்பதால் தான் இப்படி மாற்றி, மாற்றி அவரை குத்திக் காட்டி பேசி இருப்பதாக ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா முதல் போட்டிக்கு முன் தன்னால் இந்தப் போட்டியில் ஆடவில்லை என்பதை நம்பவே முடியவில்லை என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 20, 2020, 13:14 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
IPL 2020 News in Tamil : Dhoni takes dig at Suresh Raina at first match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X