For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 3 வீரர்கள்.. சிஎஸ்கே வியூகம்.. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த தோனி மாஸ்டர்பிளான்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் எதிரி அணிகளாக ரசிகர்கள் கருதும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வலுவான அணியாக கூறப்பட்டாலும், தோனியின் கேப்டன்சி அதை ஈடு கட்டும்.

தோனி குறிப்பிட்ட வியூகம் அமைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தப் போகிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

கொரோனா ஹீரோக்களுக்காக.. களமிறங்கிய கோலி டீம்.. நெகிழ வைத்த ஆர்சிபி!கொரோனா ஹீரோக்களுக்காக.. களமிறங்கிய கோலி டீம்.. நெகிழ வைத்த ஆர்சிபி!

ஆடுகளங்கள்

ஆடுகளங்கள்

2020 ஐபிஎல் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த மூன்று மைதானங்களும் பெரும்பாலும் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மந்தமான ஆடுகளங்கள்.

பியுஷ் சாவ்லா தேர்வு

பியுஷ் சாவ்லா தேர்வு

கிட்டத்தட்ட சென்னை ஆடுகளமும் அதே போன்றே இருக்கும். அதன் காரணமாகவே சிஎஸ்கே அணி எப்போதும் சுழற் பந்துவீச்சாளர்களை அதிகம் அணியில் தேர்வு செய்யும். 2020 ஐபிஎல் ஏலத்தில் கூட ஏற்கனவே அணியின் நான்கு முக்கிய சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்த நிலையில், ஐந்தாவதாக பியுஷ் சாவ்லா தேர்வு செய்யப்பட்டார்.

பெரிய பாதிப்பு இல்லை

பெரிய பாதிப்பு இல்லை

தற்போது ஹர்பஜன் சிங் அணியில் இல்லாவிட்டாலும், சிஎஸ்கேவுக்கு அணித் தேர்வில் பெரிய பாதிப்பு இல்லை. நான்கு அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கே வசம் உள்ளனர். அவர்களை வைத்து தான் தோனி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தப் போகிறார்.

எத்தனை சுழற் பந்துவீச்சாளர்கள்

எத்தனை சுழற் பந்துவீச்சாளர்கள்

சிஎஸ்கே அணியில் தற்போது ரவீந்திர ஜடேஜா, இம்ரான் பியுஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் என நான்கு அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் தவிர சாய் கிஷோர், கரன் சர்மா என இரண்டு அனுபவம் குறைந்த சுழற் பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள்

மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள்

தோனி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பியுஷ் சாவ்லா, ஜடேஜா, இம்ரான் தாஹிர் என மூன்று முக்கிய சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்க அதிக வாய்ப்புள்ளது. இவர்களுடன் தீபக் சாஹர் அல்லது ஷர்துல் தாக்குர், ஜோஷ் ஹேசல்வுட் அணியில் பந்துவீச்சில் இடம் பெறுவர்.

ஆல் - ரவுண்டர்கள்

ஆல் - ரவுண்டர்கள்

ஆல் ரவுண்டராக பிராவோவும் இடம் பெறுவார். இரண்டு முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என தோனி நினைத்தால் இளம் இங்கிலாந்து ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தோனிக்கு ஆறு அல்லது ஏழு பந்துவீச்சாளர்கள் கையில் இருப்பார்கள்.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் முழுமையாக அவர்களின் நான்கு ஓவர்களை வீசச் செய்வார் தோனி. அதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.

மும்பை பலவீனம்

மும்பை பலவீனம்

இது தான் தோனியின் வியூகமாக இருக்கும் என விமர்சகர்கள் கருதுகின்றனர். மும்பை அணியில் வேகப் பந்துவீச்சாளர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர். எனவே, அந்த அணி பந்துவீச்சில் இந்த ஐபிஎல் சீசனில் தாக்கம் ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிஎஸ்கே வெல்ல வாய்ப்பு

சிஎஸ்கே வெல்ல வாய்ப்பு

சுழற் பந்துவீச்சு விஷயத்தில் மும்பை அணியின் பலவீனம் சிஎஸ்கே அணியின் பலமாக அமைந்துள்ளதால் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பேட்டிங்கில் ஒப்பிட்டுப் பார்த்தால் சிஎஸ்கே அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான அணியாக காட்சி அளிக்கிறது.

Story first published: Thursday, September 17, 2020, 20:16 [IST]
Other articles published on Sep 17, 2020
English summary
Chennai Super KIngs (CSK) Latest News Updates in Tamil : CSK vs MI : Dhoni will play 3 spinners - Ravindra Jadeja, Piyush Chawla, Imran Tahir, to win Mumbai Indians in the opening IPL league match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X