For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நொடி வரை காத்திருந்து முடிவெடுத்த தோனி.. அதான் எங்க தல என கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலியின் பெங்களூர் அணியை வீழ்த்தி அபார வெற்றியுடன் முதல் போட்டியை துவக்கி உள்ளது.

இந்த போட்டியில் டிஆர்எஸ் மன்னன் தோனி, ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுத்து தன் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

சிங்கத்தை குகையில் சந்தித்து சிதைந்து போன ஆர்சிபி... வெற்றியுடன் துவக்கிய யெல்லோ ஆர்மி சிங்கத்தை குகையில் சந்தித்து சிதைந்து போன ஆர்சிபி... வெற்றியுடன் துவக்கிய யெல்லோ ஆர்மி

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அந்த அணி விக்கெட்களை இழந்து வந்தது. இம்ரான் தாஹிர் வீசிய 12வது ஓவரின் முதல் பந்தை நவ்தீப் சைனி சந்தித்தார்.

எல்.பி.டபுள்யூ கேட்டார்

எல்.பி.டபுள்யூ கேட்டார்

இம்ரான் வீசிய பந்து சைனியின் காலில் பட, எல்.பி.டபுள்யூ விக்கெட் கேட்டார் இம்ரான். அம்பயர் விக்கெட் தர மறுத்தார். இம்ரான், கேப்டன் தோனியிடம் ரிவ்யூ கேட்கலாம் என முறையிட்டார்.

கடைசி நொடி

கடைசி நொடி

தோனி நீண்ட நேரம் சிந்தித்து, ரிவ்யூ கேட்க கடைசி ஒரு நொடி மட்டுமே நேரம் இருக்கையில் ரிவ்யூ என சைகை காட்டினார். டிஆர்எஸ் மன்னன் தோனி தான் என இந்த முறையும் நிரூபித்தார் தோனி. காரணம், ரிவ்யூவில் அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால், எல்.பி.டபுள்யூ-வுக்காக இல்லை.

சரியான ரிவ்யூ

சரியான ரிவ்யூ

இம்ரான் வீசிய பந்து நவ்தீப் சைனி பேட்டில் லேசாக உரசிச் சென்றுள்ளது. அதை ஷேன் வாட்சன் கேட்ச் பிடித்தார். ஆனால், மேலோட்டமாக பார்க்கையில் சைனியின் காலில் தான் பந்துபட்டது போன்று இருந்தது. தோனி எப்படியோ சரியாக கணித்து ரிவ்யூ கேட்டு அந்த விக்கெட்டை சாய்த்தார்.

ரசிகர்கள் குஷி

தோனி இப்படி கடைசி நொடி வரை காத்திருந்து சரியாக ரிவ்யூ கேட்டதை பார்த்து தோனி ரசிகர்கள் துள்ளிக் குதித்து கொண்டாடி வருகிறார்கள். டிஆர்எஸ் என்றால் தோனி ரிவ்யூ சிஸ்டம் தான் என கூறி புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் வெற்றி

சென்னை சூப்பர் வெற்றி

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 70 ரன்களில் பெங்களூர் அணியை ஆட்டமிழக்கச் செய்தது. பெங்களூர் அணி வழக்கம் போல ஐபிஎல் தொடரில் ராசியில்லாத அணியாக 2019 ஐபிஎல் தொடரை துவக்கி உள்ளது.

Story first published: Saturday, March 23, 2019, 23:49 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
CSK vs RCB IPL 2019 : Dhoni took DRS decision with just 1 second to go
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X