For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் பந்தில் அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்.. அடுத்த பந்திலேயே கூல் செய்த ஹர்பஜன்!!

சென்னை : ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி சிறப்பாக பந்து வீசியது. பெங்களூர் அணியை 70 ரன்களில் சுருட்டி வீசியது சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் சுழல் படை.

அதிலும் ஹர்பஜன் சிங் பெங்களூர் அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக வீழ்த்தினார். முதல் விக்கெட்டாக கோலியை வீழ்த்திய ஹர்பஜன், அடுத்து மொயீன் அலியையும் வீழ்த்தி பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

ரோஹித்துக்கு இந்திய அணி மேல் இருக்குற அக்கறை கேப்டன் கோலி, அம்பதி ராயுடுவுக்கு இல்லையே! ரோஹித்துக்கு இந்திய அணி மேல் இருக்குற அக்கறை கேப்டன் கோலி, அம்பதி ராயுடுவுக்கு இல்லையே!

முதல் பந்து

முதல் பந்து

அடுத்து சிறந்த டி20 பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். அவருக்கு போட்டியின் எட்டாவது ஓவரில் பந்து வீசினார் ஹர்பஜன். அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்வீப் செய்தார். பந்து நேராக இம்ரான் தாஹிர் கைகளுக்கு சென்றது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இம்ரான் தாஹிர் கைக்கு வந்த எளிதான கேட்சை கோட்டை விட்டார். அதனால், சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏபி டி வில்லியர்ஸ் கொடுத்த கேட்ச் என்பதால், எங்கே அவர் இந்த போட்டியில் பிளந்து கட்டப் போகிறார் என்ற எண்ணம் வந்தது.

அடுத்த பந்தில் விக்கெட்

அடுத்த பந்தில் விக்கெட்

எனினும், அடுத்த பந்திலேயே ஹர்பஜன் சிங், அற்புதமாக பந்து வீசி டி வில்லியர்ஸ் விக்கெட்டை சாய்த்தார். முதல் பந்தைப் போலவே இந்த பந்தையும் அடித்த டி வில்லியர்ஸ், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

இம்ரான் தாஹிர் சொதப்பல்

இம்ரான் தாஹிர் சொதப்பல்

இம்ரான் தாஹிர் பீல்டிங்கில் சொதப்புவது புதிது கிடையாது. எனினும், ஹர்பஜன் டாப் ஆர்டரில் கோலி, மொயீன் அலி, டி வில்லியர்சை காலி செய்த பின், மிடில் ஆர்டரில் இம்ரான் தாஹிர் தன் கை வரிசையை காட்டி மூன்று விக்கெட்களை சாய்த்தார்.

Story first published: Saturday, March 23, 2019, 22:16 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
CSK vs RCB IPL 2019 - Imran Tahir dropped AB de Villiers but Harbhajan took him next ball
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X