For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கெல்லாமா அவுட் கொடுப்பீங்க? பட்லரிடம் ஏமாந்த அம்பயர்.. ரிவ்யூவால் தப்பிய வாட்சன்!

Recommended Video

IPL 2019 Butler fooled umpire | பட்லரிடம் ஏமாந்த அம்பயர், தப்பிய வாட்சன்!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி விக்கெட் கீப்பர் பட்லர், அம்பயரை ஏமாற்றி தவறான அவுட் தீர்ப்பை பெற்றார். பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் இதனால், குழப்பம் அடைந்தார்.

என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? அரைகுறையா வீடியோ பார்த்துட்டு ரிஷப் பண்ட் மேல அபாண்டமா பழி போடாதீங்க! என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? அரைகுறையா வீடியோ பார்த்துட்டு ரிஷப் பண்ட் மேல அபாண்டமா பழி போடாதீங்க!

3வது ஓவரில்..

3வது ஓவரில்..

இந்தப் போட்டியில் 3வது ஓவரின் முதல் பந்தை ராஜஸ்தான் வீரர் குல்கர்னி வீசினார். அந்த பந்து வாட்சனிடம் இருந்து விலகிச் சென்று விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் சென்றது.

அம்பயர் அவுட் கொடுத்தார்

அம்பயர் அவுட் கொடுத்தார்

ஜோஸ் பட்லர் உடனடியாக அவுட் கேட்டார். அவர் எதற்கு அவுட் கேட்கிறார் என சிந்திப்பதற்குள் அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், வாட்சன் நம்பிக்கை இல்லாமல் அம்பயரை பார்த்தார். "இதுக்கெல்லாமா அவுட் கொடுப்பீங்க?" என்பது போல முகத்தை வைத்திருந்தார் வாட்சன்.

வாட்சன் ரிவ்யூ

வாட்சன் ரிவ்யூ

பின்னர் ரிவ்யூ கேட்டார் வாட்சன். ரிவ்யூவில் பந்து பேட்டிலும் படவில்லை, வாட்சனின் காலிலும் படவில்லை என தெளிவாக தெரிந்தது. அம்பயர் கொடுத்த தவறான தீர்ப்பை திரும்பப் பெற்றார். அப்புறம் ஏன் பட்லர் அவுட் கேட்டார்?

ஏமாந்த அம்பயர்

ஏமாந்த அம்பயர்

குல்கர்னி வீசிய பந்து வைடு ஆக சென்றது என்பதே உண்மை. அம்பயர் வைடு கொடுப்பதை தவிர்க்க நினைத்த விக்கெட் கீப்பர் பட்லர் அவுட் கேட்டுள்ளார். இதில் ஏமாந்து போன அம்பயர் நந்தன், பந்து வைடாக சென்றதா, இல்லையா என்பதை பற்றி சிந்திக்காமல், அவுட் கொடுத்து விட்டார்.

Story first published: Sunday, March 31, 2019, 21:43 [IST]
Other articles published on Mar 31, 2019
English summary
CSK vs RR : Buttler fooled the umpire with wrong wicket call and Watson confused over LBW given.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X