For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே பவுலிங்.. கடைசி நேரத்தில் தோனி மாற்றிய "பிளான்" - மாஸ் வீரர் மீண்டும் அணியில் "என்ட்ரி"

ஷார்ஜா: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.30) ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில் ஒரு முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'தோனி ரன் அடிக்காவிட்டால் என்ன; திறமையான கேப்டன்சியை பாருங்க'.. சொல்வது ஆஸ்திரேலியா ஜாம்பவான்! 'தோனி ரன் அடிக்காவிட்டால் என்ன; திறமையான கேப்டன்சியை பாருங்க'.. சொல்வது ஆஸ்திரேலியா ஜாம்பவான்!

 எஸ்ஆர்ஹெச் வெளியேறிவிட்டதா?

எஸ்ஆர்ஹெச் வெளியேறிவிட்டதா?

ஐபிஎல் தொடரில், இன்று மிக முக்கியமான போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. விளையாடுறது SRH கூட.. இதுல என்ன மிக முக்கியமான போட்டின்னு கேட்குறீங்களா? இருக்குங்க.. விஷயம் இருக்கு. SRH இன்னும் ஐபிஎல் 2021 தொடரில் இருந்து வெளியேறவில்லை. இந்த போட்டியோடு சேர்த்து இன்னும் நான்கு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், அந்த அணிக்கு இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு கொஞ்சூண்டு மீதமுள்ளது.

 அரிதிலும் அரிது

அரிதிலும் அரிது

இதுவரை மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி, அதில் 2ல் மட்டும் வெற்றிப் பெற்றுள்ள சன் ரைசர்ஸ் கையில் வைத்திருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை 4. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றால், மொத்தம் 12 புள்ளிகள் பெறும். டாப் 3 மூன்று இடங்களில் உள்ள சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளின் அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுக்களைப் பொறுத்து, எஸ்ஆர்ஹெச் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். ஆனால், அதற்கு அவர்கள் மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெல்ல வேண்டும். அந்த வகையில், இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது தான்.

 அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

அந்த வகையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில், சாம் கர்ரனுக்கு பதில் பிராவோ மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் காயம் காரணமாக பிராவோ விலகியிருக்க, சாம் கர்ரன் விளையாடினார். ஆனால், அந்த போட்டியில் சாம் ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில், இன்றைய போட்டியில், ஹேசில்வுட்டுக்கு பதில் சாம் கர்ரன் மீண்டும் களமிறக்கப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில், தோனி அந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக சென்னை அணியின் 'சுட்டிக் குழந்தை' சாம் கர்ரன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (w/சc), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முதலிடம்

முதலிடம்

அதேசமயம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜேசன் ராய், ரிதிமான் சாஹா (w), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 10 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதற்கு நேர்மாறாக, 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Story first published: Thursday, September 30, 2021, 20:07 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
csk won the toss chose bowl against srh ipl 2021 - சிஎஸ்கே
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X