For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்ல ஐபிஎல்... அப்படியே நேரா திரும்பினா உலக கோப்பை.. சூப்பர் ஸ்கெட்ச் போடும் அந்த இளம்வீரர்

மும்பை: ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடி உலக கோப்பை தொடரில் இடம் பிடிப்பேன் என்று இளம்வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

24 வயது ஷ்ரேயஸ் அய்யர் இந்திய அணிக்காக 6 ஒருநாள், 6 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் 484 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளார்.

எதிர்கால வீரர்! மேட்ச் வின்னர்! ரிஷப் பண்ட்டை ஆஹா.. ஓஹோ.. என புகழும் இரு ஜாம்பவான் கேப்டன்கள் எதிர்கால வீரர்! மேட்ச் வின்னர்! ரிஷப் பண்ட்டை ஆஹா.. ஓஹோ.. என புகழும் இரு ஜாம்பவான் கேப்டன்கள்

அவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அவர் கூறியதாவது:

நன்றாக விளையாடுகிறேன்

நன்றாக விளையாடுகிறேன்

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் நன்றாக விளையாடி வருகிறேன். நான் ஐபிஎல் போட்டியிலும் நன்றாக விளையாடினால் என்னை அணியில் சேர்ப்பது குறித்து ஒன்றுக்கு இருமுறை யோசிப்பார்கள்.

சந்தித்து ஆலோசனை

சந்தித்து ஆலோசனை

தேர்வுக்குழு உறுப்பினரான ககன் கோடா என்னை சந்தித்தார். நான் நன்றாக விளையாடி வருவதாக அவர் கூறினார். தொடர்ந்து தான் நன்றாக விளையாட வேண்டும் என்று என்னிடம் கூறினார். இதுபோல விளையாடவேண்டும் என்று அறிவுரை கூறினார்.

கேப்டன் என்பதே மகிழ்ச்சி

கேப்டன் என்பதே மகிழ்ச்சி

தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அது என்னை மிகுந்த பொறுப்புக்குரியவனாகவும், முதிர்ச்சிக்கு உரியவனாகவும் மாற்றி உள்ளது.

சிறப்பான விளையாட்டு

சிறப்பான விளையாட்டு

நான் ஒரு கேப்டன் என்று ஒருபோதும் எண்ணியது இல்லை. ஒவ்வொரு ஆட்டத்தையும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடி உலக கோப்பை தொடரில் இடம் பிடிப்பேன் என்று அவர் கூறினார்.

Story first published: Tuesday, March 19, 2019, 15:58 [IST]
Other articles published on Mar 19, 2019
English summary
"Currently my focus is on IPL and winning it says the Delhi Capitals captain Shreyas Iyer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X