For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி எங்க ரூமுக்கு வந்தார்... நாங்க கவலைப்பட வேணாம்னு சொன்னோம்

கொழும்பு : இலங்கையில் கடந்த 2002ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின்போது இலங்கை டிரசிங் ரூமிற்கு சென்று பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குறித்து முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககாரா தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய சங்ககாரா, அந்த ஒரு நாள் போட்டியின்போது இலங்கை வீரர் ரசல் அர்னால்ட் மற்றும் கங்குலிக்கு இடையில் நடைபெற்ற உரசல் குறித்து பகிர்ந்தார்.

இதையடுத்து இலங்கை அணியினரின் டிரசிங் ரூமிற்கு வந்த கங்குலி, இந்த சம்பவத்திற்காக தான் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் கவலைப்பட வேண்டாம் என்று தாங்கள் தேற்றியதாகவும் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை வெற்றி

இந்தியா, இலங்கை வெற்றி

கந்த 2002ல் நடைபெற்ற சாம்பியன் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலிக்கும் இலங்கை வீரர் ரசல் அர்னாட்டிற்கு மோதல் ஏற்பட்டது.

கடுப்பான கங்குலி

கடுப்பான கங்குலி

அந்த போட்டியில் அர்னால்ட் பிட்ச்சின் மீது அடிக்கடி ஓடியதை தொடர்ந்து சுட்டிக்காட்டிய கங்குலி, ஒரு கட்டத்தில் கோபமடைய இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அம்பயர்கள் தலையிட்டு அவர்களை விலக்கினர். இதனால் அந்தப் போட்டி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.

தேற்றிய இலங்கை வீரர்கள்

தேற்றிய இலங்கை வீரர்கள்

தொடர்ந்து இலங்கை அணியினரின் டிரசிங் ரூமிற்கு சென்ற சவுரவ் கங்குலி, அங்கிருந்த சங்ககாரா உள்ளிட்ட வீரர்களுடன் வருத்தத்துடன் பேசியதாகவும், இந்த நிகழ்வு தன்னை சஸ்பெண்ட் செய்ய காரணமாக அமையும் என்று கூறியதாகவும் தற்போது சங்ககாரா தெரிவித்துள்ளார். கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர், இதைதொடர்ந்து அவரை அணி வீரர்கள் தேற்றியதாகவும், இதை பெரிய நிகழ்வாக்க மாட்டோம் என்றும் எல்லாம் சரியாகிவிடும் என்று உறுதியளித்ததாகவும் கூறினார்.

கங்குலி பொறுமையானவர்

கங்குலி பொறுமையானவர்

முன்னதாக கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் மற்றும் தற்போதைய தென்னாப்பிரிக் க அணியின் இயக்குநருமான கிரீம் ஸ்மித், இந்திய அணியில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி போன்ற வீரரை பார்ப்பது கடினம் என்று தெரிவித்தார். இதேபோல நிர்வாக விஷயங்களுக்காக கங்குலியுடன் பேசியுள்ளதாகவும் அவர் எந்த விஷயத்தையும் பொறுமையுடன் கையாள்வார் என்றும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, July 13, 2020, 14:41 [IST]
Other articles published on Jul 13, 2020
English summary
Arnold was repeatedly running on the pitch during that game -Sangakkara
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X