For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் கிரிக்கெட்டே பெட்டர்.. ஐபிஎல்-ல் வெறும் பணம் தான் முக்கியம்..ஸ்டெய்னின் பேச்சால் சர்ச்சை

சென்னை: ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு ஸ்டெயின் அளித்துள்ள பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இருந்து டேல் ஸ்டெயின் தானாக விலகினார்.

பாவம்.. மனுஷன் உயிரை கொடுத்து விளையாடுகிறார்.. 7 வருடங்களுக்கு பின் ஸ்ரீசாந்த் செய்த சாதனை.. செம பாவம்.. மனுஷன் உயிரை கொடுத்து விளையாடுகிறார்.. 7 வருடங்களுக்கு பின் ஸ்ரீசாந்த் செய்த சாதனை.. செம

இந்நிலையில் தான் விலகியதற்கு ஐபிஎல் தொடரில் ஆட்டத்தை விட பணம் பெரிதாக பார்க்கப்படுவதுதான் காரணம் என ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

அயல்நாட்டு வீரர்

அயல்நாட்டு வீரர்

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் அனைத்து சீசன்களிலும் அயல்நாட்டு வீரர்கள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். ஒவ்வொரு அணியிலும் ப்ளேயிங்11 ல் 4 அயல்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் அவர்கள் இந்தியாவுக்கு வருகை புரிந்து பிரபலமடைகின்றனர்.

ஸ்டெயின்

ஸ்டெயின்

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டேயின் கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார். இவருக்கு வெறும் 3 போட்டிகளிலேயே வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தார். இதனால் இந்த ஆண்டு ஆர்.சி.பி அணியில் இருந்து ஸ்டெயின் கழட்டி விடப்படுவதாக இருந்தார். ஆனால் அவர் தாமாகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் தொடர்

பாகிஸ்தான் தொடர்

தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடி வரும் ஸ்டெயின் ஐபிஎல்-ல் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்-ல் வீரர்களின் ஆட்டத்தை விட அவர்களின் வருமானம், பணம் குறித்த பேச்சுகளே அதிகமாக உள்ளதாக குறை கூறியுள்ளார்.

 ஐபிஎல் வெறும் பணம்தான்

ஐபிஎல் வெறும் பணம்தான்

பாகிஸ்தான் சூப்பர் லீக், ஸ்ரீ லங்கா சூப்பர் லீக் போன்ற தொடர்களில் கிரிக்கெட்டிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் ஐபிஎல்-ல் வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் போனார்கள் போன்ற பணம் குறித்த பேச்சே அதிகமாக உள்ளது. இங்கு அங்கீகாரம் என்பது இல்லை. எனவே நான் அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்தேன் என ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 2, 2021, 21:18 [IST]
Other articles published on Mar 2, 2021
English summary
Dale Steyn feels Pakistan Super league more rewarding than IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X