For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்கள் வேலைய மட்டும் பாத்தா போதும்அப்றம் மனுஷனா இருக்க மாட்டேன் வர்ணனையாளரிடம் டேல் ஸ்டெயின் காட்டம்

பாகிஸ்தான்: டேல் ஸ்டெயின், தனது ஹேர்ஸ்டைல் குறித்து விமர்சித்த வர்ணனையாளருக்கு சற்றும் யோசிக்காமல் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது பேசுப்பொருளாகியுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போது டேல் ஸ்டெயினின் ஹேர்ஸ்டெயில் குறித்து வர்ணனையாளர் சைமன் டௌல் கிண்டல் அடித்திருந்தார்.

இந்நிலையில் உங்கள் பணியை மட்டும் நீங்கள் பார்த்தால் போதும், பிறகு நான் மனிதனாய் இருக்கமாட்டேன் என ஸ்டெயின் கடுமையாக தெரிவித்துள்ளார்.

Dale Steyn slams commentator for Criticism on his hairstyle

நேற்றைய ஆட்டம்

பாகிஸ்தானில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கடந்த 26ம் தேதி குவட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஸ்வார் சால்மி அணிகள் மோதின. இப்போட்டியின் போது கிளாடியேட்டர்ஸ் அணி வீரர் டேல் ஸ்டெயின் ஹேர்ஸ்டெயிலில் கொரோனா கால பிரச்சனை தெரிவதாக வர்ணனையாளர் சைமன் டௌல் கிண்டலடித்தார்.

ஸ்டெயின் பதிலடி

இதற்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டெயின், யார் என் ஹேர்ஸ்டெயில் குறித்து பேசியது என கேள்வி கேட்டுள்ளார். பின்னர் மற்றொரு ட்வீட்டில் வர்ணனையாளர்களின் வேலை ஆட்டம் குறித்து பேசுவது அதை மட்டும் அவர்கள் பார்த்தால் போதும். தேவையில்லாததை பேச வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மனிதனாக இருக்கமாட்டேன்

மேலும் அவர், ஆட்டம் குறித்து பேசுவதை தவிர்த்து வீரர்களின் உயரம், உடலமைப்பு, ஹேர்ஸ்டெயில், வாழ்க்கை முறை குறித்து பேசவேண்டாம். அப்படி நீங்கள் பேச விரும்பினால், என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் கருத்துக்கு நான் மனிதனாக பதிலளிக்க நேரம் இருக்காது. என ஸ்டெயின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, February 28, 2021, 16:11 [IST]
Other articles published on Feb 28, 2021
English summary
Dale Steyn slams commentator for Criticism on his hairstyle
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X