For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு!

தாகா : வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் டேனியல் வெட்டோரி அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவி செய்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அமைப்பில் பணிபுரியும் குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு தன் சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதியை வழங்கி விடுமாறு அவர் கூறி உள்ளார்.

அவரது உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே போல, இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

என்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னாஎன்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

சிறந்த சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் இருந்தவர். ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பைக்காக அவரை 100 நாட்களுக்கு மட்டும் சிறப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. டி20 உலகக்கோப்பை தொடரும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சம்பளம் அதிகம்

சம்பளம் அதிகம்

வங்கதேச பயிற்சியாளர்களில் அவருக்கு தான் சம்பளம் அதிகம். அவரது சம்பளம் இந்திய மதிப்பில் 1.88 கோடி ஆகும். கொரோனா வைரஸ் காரணமாக எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறாத நிலையில், அவரும் வங்கதேச அணிக்கு பெரிய அளவில் பயிற்சி அளிக்கவில்லை.

உதவி

உதவி

இந்த நிலையில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை, வங்கதேச கிரிக்கெட் அமைப்பில் பணிபுரியும் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வழங்கி விடுமாறு அவர் கூறி உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்தார்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

டேனியல் வெட்டோரி எவ்வளவு தொகையை அளிக்குமாறு கூறினார் என்பது தெரியவில்லை. எனினும், அவரது உதவி பாராட்டுக்களை பெற்றுள்ளது. வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் நிதிச் சிக்கலில் இருக்கும் நிலையில் அவர் செய்த உதவியால் பல ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

இந்திய வீரர்கள் உதவ வேண்டும்

இந்திய வீரர்கள் உதவ வேண்டும்

நியூசிலாந்து வீரரான டேனியல் வெட்டோரி, வங்கதேசத்திற்கு உதவி செய்த நிலையில், கோடிகளில் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Sunday, May 31, 2020, 19:22 [IST]
Other articles published on May 31, 2020
English summary
Daniel Vettori helps Bangladesh cricket staffs amid Coronavirus pandemic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X