For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புவனேஸ்வர் குமார் வேண்டாம்.. இவரை அழைத்து செல்லுங்கள்.. டேனிஷ் கனேரியா இந்தியாவுக்கு அறிவுரை

லாகூர் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் புவனேஸ்வர் குமார் இடம்பெறுவாரா என்பது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளது.

புவனேஸ்வர் குமார் கடந்த சில போட்டிகளாக தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

குறிப்பாக புவனேஸ்வர் குமார் ஓவரில் எதிரணி வீரர்கள் ரன்களை குவித்து வருகின்றனர்.

டி20 உலககோப்பையை வெல்லப் போவது யார்? 2 அணிகளுக்கு வாய்ப்பு.. வாட்சன் பளீச்டி20 உலககோப்பையை வெல்லப் போவது யார்? 2 அணிகளுக்கு வாய்ப்பு.. வாட்சன் பளீச்

பின்னடைவாக அமையும்

பின்னடைவாக அமையும்

இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இந்த நிலையில் புவனேஸ்வர் குமாருக்கு தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, பும்ரா இந்தியாவில் இடம் பெறவில்லை என்றால் அது பெரும் பின்னடைவாக அமையும் என்று தெரிவித்தார்.

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் புவனேஸ்வர் குமார் ஓவரை எதிரணி பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்குவார்கள் ஏற்கனவே ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அவருடைய ஓவரை பேட்ஸ்மேன்கள் அடிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் பந்து பேட்டுக்கு நன்றாக வரும் . இதனால் புவனேஸ்வர் குமாரை விட தீபக் சாகர்தான் சிறந்த தேர்வாக இருப்பார்.

தீபக்சாகர்

தீபக்சாகர்

தீபக்சாகர் பேட்டிங் செய்யக்கூடிய வீரர் என்பதால் அவரை இந்திய அணியில் விளையாடுவது சிறந்த முடிவாக இருக்கும் என்று அவர் கூறினார். தீபக்சாகர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 24 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இன்னும் எஞ்சிய போட்டிகளில் அவர் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்து புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அவரை பிளேயிங் லெவனில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

பும்ரா குறித்து அப்டேட்

பும்ரா குறித்து அப்டேட்

இதனிடையே பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் அடைந்த அளவிற்கு மிகவும் சீரியஸாக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.பும்ராவுக்கு ஏற்பட்டுள்ளது stress fracture இல்லை அது வெறும் stress reaction தான் என்று மருத்துவ அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதற்காக நான்கு வாரங்கள் ஓய்வில் இருந்தால் பும்ராவால் பழையபடி விளையாட முடியும்.

Story first published: Sunday, October 2, 2022, 16:18 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
Danish kaneria asks bcci not to pick bhuvaneshwar kumar in playing xi புவனேஸ்வர் குமார் வேண்டாம்.. இவரை அழைத்து செல்லுங்கள்.. டேனிஷ் கனேரியா இந்தியாவுக்கு அறிவுரை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X