For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஹர்திக் பாண்ட்யா புத்திசாலி இல்லை”.. 2வது டி20ல் பெற்ற தோல்வி.. பாக். முன்னாள் வீரர் கடும் விளாசல்!

லக்னோ: இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா புத்திசாலித்தனமாக யோசிக்கவில்லை, அவரிடம் எந்தவித திட்டமும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தானிஷ் கனேரியா விளாசியுள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3 - 0 என வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, டி20 தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்களை விளாசியது. அதிகபட்சமாக டெவோன் கான்வே 52 ரன்களும், டேரில் மிட்செல் 59 ரன்களும் விளாசினர்.

கே.எல்.ராகுலிடம் செய்த அதே தவறு.. 2வது டி20க்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை.. ஹர்திக் செய்வாரா?? கே.எல்.ராகுலிடம் செய்த அதே தவறு.. 2வது டி20க்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை.. ஹர்திக் செய்வாரா??

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

160 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டிய அந்த அணியை கடைசி ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கி அர்ஷ்தீப் சிங் 176 ரன்கள் வரை கொண்டு சென்றார். இதனால் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

பாக். வீரர் குற்றச்சாட்டு

பாக். வீரர் குற்றச்சாட்டு

இந்நிலையில் இந்த தோல்விக்கு பாண்ட்யா தான் காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தானிஷ் கனேரியா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஹர்திக் பாண்ட்யா புத்திசாலித்தனமாக செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. அவரிடம் எந்தவித திட்டமுமே கிடையாது. ஏனென்றால் பவுலர்களை ரொட்டேஷன் செய்வதே சரியில்லாமல் தான் இருந்தது. ஷிவம் மவியை மிகவும் தாமதமாக கொண்டு வந்தார். ஆனால் அவரை முன்கூட்டியே கொண்டு வந்திருந்தால் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம்.

 பாண்ட்யா சொதப்பல்

பாண்ட்யா சொதப்பல்

களத்தில் ஸ்பின்னர்களுக்கு நல்ல டேர்ன் கிடைத்திருந்தது. எனவே தீபக் ஹூடாவுக்கு இன்னும் சில ஓவர்களை கொடுத்திருக்க வேண்டும். இங்கு தான் ஹர்திக் பாண்ட்யா சொதப்பினார். அவரிடம் எந்த திட்டமுமே இல்லாமல் போனது. ஹர்திக் பாண்ட்யாவே புதிய பந்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை. சரியான பகுதியில் வீசாததால் நியூசிலாந்தின் ஓப்பனர்கள் அதிரடி காட்டினர். ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரையே சொதப்பியதால் இதன் பின்னர் வந்த இந்திய பவுலர்கள் நிறைய ரன்களை கசியவிட்டனர் என கனேரியா கூறியுள்ளார்.

2வது டி20

2வது டி20

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நாளை ( ஜனவரி 29 ) லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை போலவே இந்த களத்திலும் ஸ்பின்னர்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என்பதால் கடும் போட்டியை எதிர்பார்க்கலாம். இந்த முறையாவது பாண்ட்யா சாஹலுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, January 28, 2023, 17:32 [IST]
Other articles published on Jan 28, 2023
English summary
Ex Pakistan cricketer Danish kaneria slams India captain Hardik pandya for New Zealand 1st T20I loss
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X