For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்ன இது சின்னப்புள்ள தனமா?”.. ஆஷஸில் டேவிட் வார்னர் செய்த தவறு.. விளைவு என்ன தெரியுமா - வீடியோ

சென்னை: ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் செய்த விளையாட்டு தனமான தவறினால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும்.

உலகின் மிகவும் பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி திணறி வருகிறது.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியால் முதல் இன்னிங்ஸில் 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பேட்டிங் ஏமாற்றம்

பேட்டிங் ஏமாற்றம்

பேட் கம்மின்ஸ் வீசிய ஓவர்களில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். அதிகபட்சமாக ஒல்லி போப் (35), ஜாஸ் பட்லர் (39) ரன்கள் மட்டுமே எடுத்தனர். பவுலிங்கை பொறுத்தவரை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்களும், ஸ்டார்க், ஹாசல்வுட் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வார்னருக்கு அதிர்ஷ்டம்

வார்னருக்கு அதிர்ஷ்டம்

பேட்டிங்கில் தான் அதிர்ஷ்டம் இல்லையென்றால் பவுலிங்கிலும் இங்கிலாந்து அடிவாங்கி வருகிறது. குறிப்பாக டேவிட் வார்னரிடம் செய்த தவறு, வினையாக வந்து சேர்ந்துள்ளது. ஆட்டத்தின் 32வது ஓவரின் போது ஒல்லி ராபின்சன் வீசிய பந்தில் வார்னர் எட்ஜானார். ஆனால் 2வது ஸ்லிப்பாக நின்றுக்கொண்டிருந்த பேர்ன்ஸ் அதனை டைவ் அடித்தும் பிடிக்க தவறிவிட்டதால் வார்னருக்கு 2வது வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரின் ஸ்கோர் 49 ஆகும்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இதனை விட விளையாட்டான தவறு ஒன்றை வார்னர் செய்தது அதிர்ச்சி கொடுத்தது. ஆட்டத்தின் 37வது ஓவரின் போது மார்க் வுட் வீசிய பந்தை சிங்கிள் தட்டிய, அவர், கெத்தாக சிங்கிள் ஓட கிறீஸை விட்டு வெளியேற சென்றார். ஆனால் அந்த பந்தோ நேராக ஷார்ட் லெக் திசையில் இருந்த ஹமீத்திடம் சென்றது. இதனை அறியாது வார்னர் க்ரீஸை விட்டு வெளியேற, ஹமீத் ஸ்டம்ப் அவுட் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பு நொடி

ஆனால் அனைவரும் எதிர்பார்த்த படி அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. பதற்றத்தில் இருந்த ஹமீத் பந்தை ஸ்டம்பிற்கு வீச தாமதம் செய்துவிட்டார். வார்னரும் சென்ற வேகத்தில் திரும்பியதால் சறுக்கி விழுந்துவிட்டார். இதனால் பந்து முதலில் போகுமா? பேட் முதலில் போகுமா என்ற எதிர்பார்ப்பில் நூல்யிழையில் டேவிட் வார்னர் தப்பித்தார்.

Recommended Video

Ben Stokes bowls 14 no-balls! 3rd umpire misses overstepping in Gabba Ashes Test | OneIndia Tamil
விளைவு என்ன

விளைவு என்ன

இங்கிலாந்து அணி அங்கு செய்த மிஸ் ஃபீல்டிங் விளைவாக டேவிட் வார்னர் முதல் இன்னிங்ஸில் 94 ரன்களை குவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்தை விட 142 முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. இதே போல வார்னர் செய்த சிறிய தவறுகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Thursday, December 9, 2021, 20:10 [IST]
Other articles published on Dec 9, 2021
English summary
David Warner and Haseeb Hameed involved in the comedy of errors on 1st test of Ashes series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X